உள்ளூர் செய்திகள்

அரசு சட்டங்களால் வாராக்கடன் வசூல்!

டில்லியில் நடைபெற்ற இந்திய வங்கிகள் கூட்டமைப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பேசினார். இந்த நிகழ்ச்சியில், 'மத்திய அரசு அமல்படுத்திய திவால் சட்டம், ரிசர்வ் வங்கியின் நடவடிக்கை, வங்கிகள் காட்டிய தீவிரம் போன்றவற்றால், வாராக்கடன்கள் 2 -மற்றும் 3 காலாண்டுகளாகக் குறைந்து வருகின்றன.2018 - 2019ஆம் நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் தொடங்கி டிசம்பர் வரையிலான ஒன்பது மாதங்களில், 98 ஆயிரத்து 493 கோடி ரூபாய் வாராக்கடன் வசூலிக்கப்பட்டுள்ளது. இது கடந்த நிதியாண்டின், இதே காலத்தில் வசூலானதைவிட, 100 சதவீதம் அதிகம்' என்று அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். 'சர்வதேச வங்கிகளின் போட்டிகளைச் சமாளிக்கும் வலிமையுள்ளதாகப் பொதுத்துறை வங்கிகள் மாற்றப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !