உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / விநோதமான விழா, விஞ்ஞான புரிதலுடன்!

விநோதமான விழா, விஞ்ஞான புரிதலுடன்!

பெண்களின் மாதவிடாய் என்பது புனிதமே என்பதை உலகிற்கு பறைசாற்றும் விதத்தில் நடைபெறும் வருடாந்திர திருவிழாவே அம்பாசி திருவிழாஅசாம் மாநிலம் குவாஹட்டியில் அமைந்துள்ள காமாக்யா கோவிலில் தற்போது இந்த விழா நடந்துவருகிறது.ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாத இறுதிக்குள்ளான அமாவாசை நாட்களில் நடைபெறுகிறது.இந்த நாள்களில், கோவில் மூடப்பட்டு பூஜைகள் நிறுத்தப்படும்,நான்காவது நாட்கள் கோவில் திறக்கப்படும்போது துறவியர்,பெண்கள்,இளைஞர்கள் என லட்சக்கணக்கானோர் கூடிவழிபடுவர்.இன்று நான்காவது நாள்.இது ஒரு வகையில், பெண்கள் உடலியல் உண்மைகளுக்கு சமுதாய மரியாதை அளிக்கும் பாரம்பரியமாகவும் பார்க்கப்படுகிறது.'பெண்மை ஒரு சக்தி', ' மாதவிடாய் என்பது ஒரு சுழற்சி, அதில் பாவம் இல்லை, புனிதமே உள்ளது' என்பதை ஒரு திருவிழாவாக அமைத்து உலகிற்கே உரக்கச் சொல்கின்றனர்.பாரம்பர்ய இந்தியரின் அறிவும் ஆன்மீகமும் ஒன்றிணைந்த இந்த புனித விழா உண்மையில் பாராட்டத்தக்க விழாவே.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Padmasridharan
ஜூன் 27, 2025 12:38

இதில் புனிதமே.. அவர்களுக்கு பிள்ளைகளை பெற்றுக் கொடுக்கும் வரை. ஆனால் வாடகை தாய், பணத்தை கொடுத்து பயன்படுத்துதல் புனிதமா சாமி


புதிய வீடியோ