உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / விறுவிறுப்பான கால்பந்தாட்ட போட்டி

விறுவிறுப்பான கால்பந்தாட்ட போட்டி

ஐபிஎல் கிரிக்கெட் போல ஐஎஸ்எல் கால்பந்தாட்ட போட்டியும் இப்போது மிகவும் பிரபலம்.சர்வதேச அளவில் பிரபலமான விளையாட்டு வீரர்களை ஏலத்தில் எடுத்து நடத்தும் இந்த போட்டி இந்தியாவின் முக்கிய நகரங்களில் நடத்தப்படுகிறது.சென்னையில் நேற்று இரவு சென்னை அணிக்கும் -மொகமதன் அணிக்கும் இடையே போட்டி நடைபெற்றது.விளையாட்டு நடைபெற்ற நேரு விளையாட்டரங்கத்தில் பத்தாயிரம் ரசிகர்கள் திரண்டிருந்தனர்.ரசிகர்களின் உற்சாகத்திற்கு நடுவே ஆரம்பமான போட்டி கடைசி வரை விறுவிறுப்பு குறையாமல் நடந்தது.சென்னை அணி வலுவான அணியாக கருதப்பட்டதால் எளிதில் ஜெயிக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர், அது அந்த அணி வீரர்களிடமும் இருந்தது, பந்தும் பெரும்பாலும் சென்னை அணி வீரர்களிடமே உழன்றது,இருந்தாலும் இதுவே அந்த அணியின் பலவீனமாகவும் போய்விட்டது, சென்னை அணி அசந்த ஒரு சில நிமிட நேரத்தில் மொகமதன் அணி வீரர் லால்ரம் சங்கா கோல் போட்டார், அதுவே மொத்த விளையாட்டிலும் போடப்பட்ட ஒரே கோலாகும்.அதன்பின் இரு அணி வீரர்களும் ஆக்ரோஷத்துடன் விளையாடி கோல்போஸ்ட்டை முற்றுகையிட்ட போதும் கோலிகளின் சமார்த்தியத்தால் கோல் எதுவும் விழவில்லை.கடைசியில் ஒரு கோல் போட்ட மொகமதன் அணி வெற்றி பெற்றது.கால்பந்து எப்போதுமே விறுவிறுப்பான விளையாட்டாகும் ஆட்டம் நடைபெறும் 120 நிமிடங்களுமே நம்மை இருக்கையின் விளிம்பில் உட்காரவைக்கும் விளையாட்டாகும் இதனை நேற்றைய விளயைாட்டும் நிரூபித்தது.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ