உள்ளூர் செய்திகள்

ஆவி திருவிழா

அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 31ம் தேதி “ஹாலோவீன்” என்ற பெயரில் ஒரு வித்தியாசமான பண்டிகை கொண்டாடப்படுகிறது. வேடமணிந்து மக்களை பயமுறுத்தும் இந்த நிகழ்வை ஆவி திருவிழா என அழைக்கின்றனர்.அந்த நாளில் பெரியவர்கள், சிறுவர்கள் எல்லோரும் பேய்கள், எலும்புக்கூடுகள் போன்ற வேடமணிந்து வீதிகளில் சுற்றுவர்.வீடுகள் முழுவதும் பூசணிக்காய் முகங்கள் வைத்து அலங்கரிக்கப்பர். குழந்தைகள் வீடு வீடாகச் சென்று இனிப்புகள், சாக்லேட்கள் பெற்றுக்கொள்வர்.அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் இருக்கும் ஈரிபஸ் ஹான்டெட் ஹவுஸ் என்பது இவ்விழாவில் பார்க்க வரும் மக்களுக்கு மிகவும் பிடித்த பிரபலமான பேய் மாளிகையாகும். அங்கே ஒளி, ஒலி, மற்றும் சிறப்பு விளைவுகள் எல்லாம் சேர்ந்து உண்மையிலேயே பேய் வீட்டில் இருப்பது போல உணர்த்தும்!ஹாலோவீன் என்றால் பயம்தான், ஆனால் அதைவிட முக்கியம் மகிழ்ச்சி.இந்த ஆவி திருவிழா இப்போது அமெரிக்க மக்களுக்கு கலை, கற்பனை, மற்றும் சிரிப்பை இணைக்கும் ஒரு ச மூக திருவிழாவாகிவிட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை