உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / புழுதி பறக்க நடந்த கார் பந்தயம்

புழுதி பறக்க நடந்த கார் பந்தயம்

சென்னையை அடுத்துள்ள இருங்காட்டுக் கோட்டையில் நடைபெற்ற இரண்டு நாள் கார் பந்தயம் குதுாகலமாக முடிவுற்றது.இரண்டாவது நாளான்று போட்டிகளைக் காண நிறைய பார்வையாளர்கள் வருகை தந்திருந்தனர்,தங்களைக் கடந்து விர் விர்ரென வாகனங்கள் கடந்து செல்லும் போது ஏற்படும் சத்தம் பார்வையாளர்கள் மாடத்தில் இருந்த குழந்தைகளை பெரிதும் கவர்ந்தது.இந்தியன் கார் ரேசிங் சார்பில் நடைபெற்ற இந்த போட்டியில் சர்வதேச வீரர்கள் கலந்து கொண்டு திறமை காட்டினர்,வெற்றி பெற்றவர்கள் பெரும்பாலும் இருபது வயதை ஒட்டியவர்களாகவே இருந்தார்கள், ஆனால் பத்து வயதில் இருந்தே இதில் பயிற்சி பெற்று வந்துள்ளார்கள்.நான்கு போட்டிகள் நடைபெற்றது நான்கிலும் கலந்து கொண்டு இரண்டு போட்டிகளில் முதல் இடத்தைப் பிடித்த ஆலம் சாம்பியன் பட்டம் வென்றார்.லியாண்டர் பயஸ் உள்ளீட்ட ஒய்வு பெற்ற நட்சத்திர வீரர்கள் இவர்களைப் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.அதிக ஆபத்து நிறைந்த போட்டி என்பதால் நிறைய பாதுகாப்பு விதிகள் கடைப்பிடிக்கப்பட்டன,கார் பந்தயத்தைப் பொறுத்தவரை ஆண்கள் மற்றும் பெண்களுக்கு என்று தனித்தனியாக நடத்தப்படுவதில்லை எல்லோருக்கும் பொதுவாகவே போட்டிகள் நடக்கும் இதில் ஆண்களுக்கு நிகராக மைதானத்தில் காரை வேகமாக ஒட்டி மூன்றாவது இடத்தைப் பிடித்த கேபிரில்லாவை பலரும் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !