நவராத்திரி பண்டிகை வருகின்ற அக்டோபர் மாதம் 3 ஆம் தேதி துவங்கி 12 ஆம் தேதி வரை பத்து நாட்கள் நடைபெறுகிறது.இந் நாட்களில் வீடுகளில் அலங்கரித்துவைத்து விருந்தினர்களை மகிழ்விப்பதற்காக பல இடங்களிலும் நவராத்திரி பொம்மைகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன, அவற்றுள் வடசென்னை ராயபுரம் கல்மண்டப பகுதியில் உள்ள 'லக்கிபாட்'நிறுவனமும் ஒன்றாகும்,பத்தாயிரத்திற்கும் அதிகமான பொம்மைகளுடன் இந்த நவராத்திரி விற்பனையை சந்தித்து வருகின்றனர்.
சிவனுக்கு சிவராத்திரி என்றால் அம்பிகைக்கு நவராத்திரி சிறப்பானது. துர்கா தேவியின் 9 அவதாரங்கள் இந்நாட்களில் போற்றி கொண்டாடப்படுகிறது. அக்டோபர் 3 ம் தேதி வியாழக்கிழமை துவங்கி அக்டோபர் 12 ஆம் தேதி விஜயதசமியுடன் முடிவடைகிறது. முதல் மூன்று நாட்கள் துர்கையை வேண்டியும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமி தேவியை வேண்டியும் ,கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதி தேவியை போற்றியும் வழிபாடு செய்யப்படுகிறது.
பல அசுரர்கள் இந்த உலகை ஆட்டி படைக்கும் சமயத்தில் அவர்களை அழிக்க வேண்டி முப்பத்து முக்கோடி தேவர்களும் மும்மூர்த்திகளிடம் சென்று முறையிட்டனர். அப்போது அவர்கள் தங்களின் சக்தியை பயன்படுத்தி ஒரு சக்தியை உருவாக்கினர், அந்த ஒரே சக்திதான் துர்கை.துர்காக தேவியும் பல அசுரர்களையும் அழித்துவிட்டார்.ஆனால் பீஜன் என்பவன் மட்டும் கடும் தவம் செய்து ஒரு வரத்தைப் பெற்று இருந்தான், அவன் உடம்பிலிருந்து வரும் ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும் ஒரு ரத்த பீஜன் உருவாகுவான் என்பதே அந்த வரம்.அம்மன் அவனை அழிக்கும் போது ஒவ்வொரு சொட்டு ரத்தத்திலிருந்தும் ஒரு அரக்கன் உருவாகி இந்த உலகே ரத்த பீஜனால் நிரம்பியிருந்தது. அப்போது தேவி தம்மிடம் உள்ள சாமுண்டி என்ற காளியை ஏவி பீஜனிடம் இருந்து வரும் ரத்தத்தை குடிக்குமாறு உத்தரவிட்டார். சாமுண்டியும் அவ்வாறு செய்ததால் ரத்த பீஜனும் அழிக்கப்பட்டான் இப்படி, ஒன்பது நாட்கள் எடுத்துக்கொண்டு அம்மன் அசுரர்களை அளித்து வெற்றி நிலைநாட்டினார்.
அப்போது கொலுவாக நின்ற தேவர்கள் அரக்கர்களை அழிப்பதற்காக தங்கள் சக்திகளை தேவியிடம் கொடுத்தனர். இதனை குறிப்பிடும் வகையில் தான் நவராத்திரியில் கொலு பொம்மைகள் வைக்கப்படுகிறது. ஓரறிவு உயிரினம் முதல் அனைத்திற்கும் ஆதாரமான அம்பிகை வரையிலும் கொலு பொம்மைகளாக வைக்கப்படுகிறது. இதுவே நவராத்திரி தோன்றிய வரலாறாகும்.கொலு வைத்தால் நம் வீட்டில் அனைத்திலும் அம்பிகை எழுந்தருளுவார் என்ற ஐதீகமும் உள்ளது. இதன் காரணமாக வீட்டில் கொலு வைத்து அனைவரையும் வரவேற்று விருந்தும் பரிசும் வழங்கி மகிழ்வது நம் பண்பாடு.கொலு முதல் கொலுவில் வைப்பதற்கான சாமி பொம்மைகள் மற்றும் தலைவர்கள் பொம்கைள் கல்யாண செட் பராம்பரிய விளையாட்டைச் சொல்லும் செட் என்று கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்தளிக்கும் விதமாக 'லக்கிபாட்' நிறுவனத்தில் சுமார் பத்தாயிரம் நவராத்திரி பொம்மைகள் தயராக இருக்கின்றன.புதிதாக கொலு வைக்க விரும்புபவர்கள் இங்கே வந்தால் ஏ டூ இசட் எல்லா பொருட்களையும் வாங்கிச் செல்லலாம் என நிறுவனத்தின் நிர்வாகிகள் சசி பிரியா,மஹாலட்சுமி தெரிவித்தனர்.தொடர்பு எண்:9176571011.-எல்.முருகராஜ்.