உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / இசையமைக்கும் ரோபோக்கள்

இசையமைக்கும் ரோபோக்கள்

சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள 'பெயிரென் யிசுவாங்' சர்வதேசக் கண்காட்சி மையத்தில் கோலாகலமாகத் தொடங்கியுள்ளது 2026-ஆம் ஆண்டிற்கான 'உலக ரோபோ மாநாடு' . ரோபோடிக்ஸ் மற்றும் செயற்கை நுண்ணறிவு துறையின் பிரம்மாண்டமான எதிர்காலத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் இந்த மாநாடு அமைந்துள்ளது.தொழில்துறை அசெம்ப்ளி லைன்களிலும், மருத்துவமனைகளிலும் இயந்திரத்தனமாகப் பணியாற்றிய ரோபோக்கள், இப்போது மனிதர்களின் கலை நயத்தையும் அப்படியே பிரதிபலிக்கத் தொடங்கியுள்ளன. மாநாட்டின் ஒரு அரங்கில், நுட்பமான 'சென்சார்கள்' மற்றும் 'ஆக்சுவேட்டர்கள்' உதவியுடன் மனித உருவ ரோபோக்கள் தத்ரூபமாகக் கிட்டார் வாசித்து அசத்தின.கிட்டார் நரம்புகளைத் துல்லியமாக மீட்டி, தாளத்திற்கு ஏற்ப தலையை அசைத்து அவை இசைத்த பாங்கு, அங்கு திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.உலகெங்கிலும் உள்ள முன்னணி ரோபோடிக்ஸ் நிறுவனங்கள் தங்களின் 600-க்கும் மேற்பட்ட அதிநவீன ரோபோக்களை இங்கு காட்சிப்படுத்தியுள்ளன.மனிதர்களைப் போலவே நடப்பது, பேசுவது, முகபாவனைகளை வெளிப்படுத்துவது மற்றும் கைவினைப் பொருட்களைச் செய்வது என 20-க்கும் மேற்பட்ட புதிய வகை மனித உருவ ரோபோக்கள் முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.சமையல் கலை, மருத்துவ அறுவை சிகிச்சைகள், வீட்டில் முதியவர்களைப் பராமரித்தல் மற்றும் மீட்புப் பணிகள் என மனித குலத்திற்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட பல்வேறு ரோபோக்கள் செயல்முறை விளக்கமளிக்கப்பட்டன.மனிதர்களின் கற்பனைத் திறனுக்கும் அப்பால், தொழில் மற்றும் கலைத்துறையில் செயற்கை நுண்ணறிவின் ஆதிக்கம் எந்தளவுக்கு வேகமெடுத்துள்ளது என்பதற்கு இந்த பெய்ஜிங் கண்காட்சியே நேரடிச் சான்றாக உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !