UPDATED : ஜன 31, 2025 04:20 PM | ADDED : ஜன 31, 2025 04:18 PM
சென்னையில் நேற்று நடைபெற்ற சென்னை-கேரளா அணிகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டியைக் காண ஏாராளமான கேரள மக்கள் வந்திருந்தனர்.இந்தியன் சூப்பர் லீ்க் கால்பந்தாட்ட போட்டி நாடு முமுவதும் நடந்துவருகிறது சென்னையில் நடைபெறும் போட்டிகளில் சென்னையுடன் பல்வேறு மாநில அணிகளும் மோதி வருகின்றன.நேற்று இரவு 7:30 மணி மேட்சில் சென்னை அணி கேரளா அணியைச் சந்தித்தது, இந்த விளையாட்டைக் காண மலையாள தேசத்தவர் திரண்டு வந்திருந்தனர்.இத்தனை பேர் சென்னையில் இருக்கின்றனரா என்று வியக்குமளவிற்கு வந்திருந்தனர்,ஒவ்வொருவரும் தத்தம் குடும்பம் குழந்தைகளுடன் டிக்கெட் எடுத்து வந்திருந்தனர் டிக்கெட் விலை குறைந்தபட்சம் 200 ரூபாய்.
போட்டி ஆரம்பம் முதலே கேரளா அணிக்கான ஆதரவு கோஷம் அதிகமாக இருந்தது இந்த கோஷத்துடன் போட்டியிடமுடியாமல் உள்ளூர் சென்னை அணியின் ஆதரவு கோஷம் அடங்கிப்போனது.கேரளா மக்கள் தந்த ஆதரவு கோஷம் காரணமா? அல்லது அணியின் விவேகமான விளையாட்டு காரணமாகவோ? ஆட்டம் ஆரம்பித்த ஐந்து நிமிடத்தில் கேரளா அணி முதல் கோலைப் போட்டது அதன்பின் ஆட்டம் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் சென்றது முதல் பாதியில் இரண்டு கோல் போட்ட கேரளா அணி இரண்டாது ஆட்டம் துவங்கியது மூன்றாவது ஒரு கோலைப் போட்டு தனது வெற்றியை உறுதி செய்தது.
மூன்று கோல் போட்டுவிட்டோமே என்று கேரளா அணி ஆட்டத்தை குறைத்துக் கொள்ளவில்ல மாறாக நான்காவது ஒரு கோலை மிஸ் செய்த வீரரை அடிக்காத குறையாக அணியின் கேப்டன் கோபித்துக் கொண்டார்.உள்ளூர் மக்கள் எங்கே நம்மை மதிக்காமல் போய்விடுவார்களோ என்று ஆவேசமாக விளயைாடிய சென்னை அணி ஒரு கோல் போட்டு கைதட்டலைப் பெற்றது ஆனால் அதன்பிறகு எவ்வளோ முயற்சித்தும் கோல்போடமுடியவில்லை 3க்கு1 என்ற ரீதியில் கேரளா அணி வெற்றி பெற்றது.இந்த வெற்றியைத் தொடர்ந்து கேலரியில் இருந்த கேரளா ரசிகர்கள் உற்சாகமாக எழுந்து நடனமாடி வீரர்களுக்கு வாழ்த்தை தெரிவித்தனர் வீரர்களும் அதை வரவேற்று கைஅசைக்க அடுத்த சில நிமிடங்களுக்கு அங்கே உற்சாக அலை வீசியது.கால்பந்தாட்டத்தின் மீதும் தம் அணி வீரர்கள் மீதும் கேரளா மக்கள் வைத்திருக்கும் அபிமானம் அசாத்தியமானது.-எல்.முருகராஜ்