உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / நிஞ்ஜாயோ ஜப்பான் பொம்மை கண்காட்சி

நிஞ்ஜாயோ ஜப்பான் பொம்மை கண்காட்சி

சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் நடந்துவரும் 'நிஞ்ஜாயோ' என்ற தலைப்பிலான ஜப்பான் பொம்மை கண்காட்சி வருகின்ற 22 ஆம் தேதி நிறைவு பெறுகிறது.ஜப்பான் அறக்கட்டளை சார்பில் நடைபெறும் இந்த கண்காட்சியில் சிறிதும் பெரிதுமான 67 பொம்மைகள் வைக்கப்பட்டுள்ளன.கலைஞர்கள்,புத்த துறவியர்,போர் வீரர்கள்,சாகச நாயகர்கள் ஆகியோர் பொம்மை வடிவில் இடம் பெற்றுள்ளனர்.ஜப்பானியர்கள் பொதுவாக பொம்மை பிரியர்கள் விரும்பி வாங்குவதும், பிறருக்கு பரிசாக வழங்குவதும் பொம்மைகள்தான்.ஒவ்வொரு பொம்மைக்கு பக்கத்திலும் அந்த பொம்மையின் பின்னனி குறித்த குறிப்பு வைக்கப்பட்டுள்ளது.இந்த பொம்மைகள் மூலம் ஜப்பான் நாட்டின் கலை,கலாச்சாரத்தையும் அறிந்து கொள்ளமுடிகிறது.இரண்டாம் உலகப்போரின் போது சமாதனத்திற்காக இந்தப் பொம்மைகள்தான் அமெரிக்காவிற்கு துாதாக அனுப்பப்பட்டது என்பது ஒரு சுவராசியமான வரலாற்று குறிப்பு.ஜப்பானியர்கள் வெறும் பேப்பரைக் கொண்டு பல்வேறு உருவங்கள் உருவாக்குவதில் திறமைசாலிகள்,'ஒரிகாமி' எனப்படும் இந்த காகித கலையால் உருவாக்கப்பட்ட விநாயகர்,பூ உள்ளீட்ட கலை வடிவங்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன.கண்காட்சி காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சி நடைபெறும்,அனுமதி கட்டணம் எதுவும் இல்லை.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி