உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / பரபரப்பாக நடந்த சென்னை கால்பந்து..

பரபரப்பாக நடந்த சென்னை கால்பந்து..

சென்னை-கோவா அணிகளுக்கு இடையே நடைபெற்ற கால்பந்தாட்ட போட்டி ஆரம்பம் முதல் கடைசி வரை பரபரப்பாக நடைபெற்றது.இந்தப் போட்டியில் இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் போட்டதை அடுத்து போட்டி சமனில் முடிந்தது.கிரிக்கெட்டிற்கு ஒரு ஐபிஎல் போல கால்பந்தாட்ட போட்டிகளுக்கு ஒரு ஐஎஸ்எல்,.நாடு முழுவதும் நடைபெறும் கால்பந்தாட்ட போட்டியில் பல முக்கிய அணிகள் டில்லி,மும்பை,கோல்கட்டா போன்ற பெரு நகரங்களில் உள்ள மைதானங்களில் மோதிக்கொண்டு வருகின்றன.சென்னையில் நேற்று நடைபெற்ற போட்டியில் கோவா அணியும்,சென்னை அணியும் மோதிக்கொண்டன,போட்டி ஆரம்பம் முதலே பரபரப்பாக இருந்தது.போட்டியின் ஆரம்பத்தில் சென்னை அணியினரின் கை ஒங்கியிருந்தது எப்படியும் கோல் போடுவார்கள் என்று எண்ணியிருந்த நிலையில் கோவா அணியினர் முதல் கோலைப் போட்டு போட்டியை விறுவிறுப்பாக்கினர்.சிறிது நேரத்தில் பதிலுக்கு சென்னை அணியினர் கோல் போட போட்டி இன்னும் விறுவிறுப்படைந்தது.கோவா அணியினருக்கு கிடைத்த பெனால்டி கிக்கை வீணாக்காமல் கோலாக மாற்ற கோவா இரண்டு கோல் போட்ட நிலையில் முன்னனி பெற்றது,சென்னை அணி விடாமல் மோதி ஒரு கோல் போட்டது அந்த கோல் இல்லை என்று கோல்கீப்பர் நடுவரிடம் முறையிட்டுப் பார்த்தார் ஆனால் அதை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.இரு அணிகளும் தலா இரண்டு கோல்கள் போட்ட நிலையில் கடைசி நிமிடம் வரை பரபரப்பு இருந்து கொண்டே இருந்தது கடைசி வரை யாரும் கூடுதலாக கோல் போடததால் இரண்டுக்கு இரண்டு என்ற நிலையில் போட்டி சமனில் முடிந்தது.மைதானத்தில் திரண்டிருந்த பத்தாயிரம் ரசிகர்களுக்கு இந்தப் போட்டி ஒரு விருந்தாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ