உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / பொக்கிஷம் / அல்டிமேட் டேபிள் டென்னிஸ்...

அல்டிமேட் டேபிள் டென்னிஸ்...

அதிகம் ஆபத்தில்லாத ,அடிபடாத ஆனால் அதிவேகமான விளையாட்டு என்றால் அது டேபிள் டென்னிஸ் போட்டியாகத்தான் இருக்கும்.சர்வதேச போட்டிகளை தொலைக்காட்சியில் பார்க்கும் போது,அந்த சிறிய டேபிளில் பந்து பட்டு எகிறுமாறு எங்கு இருந்தோ பாய்ந்து பறந்து அவர்கள் அடிப்பதை பார்க்கும் போது பிரமிப்பாகவும்,வியப்பாகவும் இருக்கும்.இந்தப் போட்டிகளை நேரில் பார்க்கும் வாய்ப்பு சமீபத்தில் கிட்டியது,சென்னை நேரு ஸ்டேடியத்தில் அல்டிமேட் டேபிள் டென்னிஸ் என்ற சர்வதேச வீரர் வீராங்கனைகளுடன் இந்திய வீரர் வீராங்கனைகள் கலந்து கொண்டு ஆடினர்.கிரிக்கெட்டைத் தவிர வேறு எந்த விளையாட்டையும் பார்ப்பது இல்லை என்று நமது ரசிகர்கள் முடிவு செய்துள்ளதால் பார்வையாளர்கள் காலரி பெரும்பகுதி காலியாகவே கிடந்தது.தற்போது அரை இறுதியைத் தொட்டுள்ள போட்டியின் முதல் அரை இறுதி சிறப்பாக நடைபெற்றது.போட்டி ஆரம்பிக்கும் வரை மைதானத்தில் வண்ண விளக்குகள் அங்குமிங்குமாக அலை பாய்ந்து வேடிக்கை காட்டிக் கொண்டிருந்தது.ஆண்கள் மற்றும் பெண்கள் ஒற்றையர் பிரிவு போட்டிகளும் பின்னர் கலப்பு இரட்டையர் போட்டிகளும் மாறி மாறி விறுவிறுப்பாக நடந்தது.போட்டிகளின் முடிவுகளில் கோவா அணி இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது.இன்று நடைபெறும் மற்றொரு அரை இறுதிக்கு பிறகு நாளை இறுதிப் போட்டி நடைபெறுகிறது.இரவு 7:30 மணிக்கு ஆரம்பிக்கும் போட்டிகளானது இரவு 10 மணியளவில் நிறைவு பெறுகிறது நாளை கோப்பை வழங்குதல் போன்ற நிகழ்வுகளால் கொஞ்சம் கூடுதல் நேரமாகலாம்.,வீட்டில் உள்ள குழந்தைகளை கூட்டிக் கொண்டு போய்க் காட்டுங்கள் இப்படிப்பட்ட விறுவிறுப்பான விளையாட்டுகளும் இருப்பதை தெரிந்து கொள்ளட்டும்.-எல்.முருகராஜ்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ