UPDATED : அக் 03, 2024 09:07 PM | ADDED : அக் 03, 2024 09:01 PM
திருமலை திருப்பதியில் வருடத்திற்கு ஒரு முறை நடைபெறும் பிரம்மாண்டமான ஒன்பது நாள் பிரம்மோற்சவ விழா நாளை 4ஆம் தேதி துவங்கி வருகின்ற 12 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.நாளை மாலை 5:45 மணி முதல் 8 மணிக்குள் கோவிலுக்குள் கொடியேற்றம் நடைபெறும்.துவஜாரோஹணம் என்றழைக்கப்படும் இந்த கொடியேற்றம் கருவறைக்கு எதிரே உள்ள துவஜஸ்தம்பத்தின் நடைபெறும், கருடன் (மகா விஷ்ணுவின் வாகனம்) படத்துடன் கூடிய கொடி ஏற்றப்படும்.பிரம்மோத்ஸவ விழாவில் கலந்து கொள்ள அனைத்து தெய்வங்களுக்கும் முறையான அழைப்பை விடுவதன் அடையாளமே இந்த கொடியேற்றம்.
அன்று இரவே ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி என்று அழைக்கப்படும் வெங்கடேஸ்வரர் பெரிய சேஷ வாகனத்தில் மாடவீதிகளில் உலா வருவார்.அவருக்கு முன்பாக பல்வேறு மாநில பக்தர்களின் கலை நிகழ்வுகள் நடைபெறும்.05/10/24 ஆம் தேதி இரண்டாம் நாள் காலை 8 மணி முதல் 10 மணி வரை சின்ன சேஷ வாகனத்தில் சுவாமி உலா. அன்று இரவு ஹம்ச என்று அழைக்கப்படும் அன்ன வாகனத்தில் உலா.06/10/24 ஆம் தேதி மூன்றாம் நாள் காலை சிம்ம வாகனம்:இரவு முத்து பந்தல் வாகனம்07/10/24 ஆம் தேதி நான்காம் நாள் காலை கற்பக விருட்ச வாகனம்:அன்று இரவு சர்வ பூபாள வாகனம்.08/10/24 ஆம் தேதி ஐந்தாம் நாள் காலை மோகினி அவதாரம்:அன்று இரவு கருட வாகனம்.இந்த தங்க கருட வாகனத்தில் வரும் போது மூலவர் அணிந்திருக்கும் நகைகள் பலவும் அணிந்து வருவதால் மூலவரே வருவதாக கருதுவர் இதன் காரணமாக பல மடங்கு பக்தர்கள் கூடுவர்.
/10/24 ஆம் தேதி ஆறாம் நாள் காலை ஹனுமந்த வாகனம்: அன்று மாலை தங்க ரத உலா:அன்று இரவு யானை வாகனம்.10/10/24 ஆம் தேதி ஏழாம் நாள் காலை சூர்ய பிரபா வாகனம்:அன்று இரவு சந்திர பிரபா வாகனம்.11/10/24 ஆம் தேதி எட்டாம் நாள் காலை தேரோட்டம்:அன்று இரவு குதிரை வாகனம்.
/10/24 ஆம் தேதி ஒன்பதாம் நாள் காலை சக்ர ஸ்நானம்:பிரம்மோத்ஸவத்தின் கடைசி நாளான ஒன்பதாம் தேதி காலை வராஹஸ்வாமி கோயிலுக்கு எதிரே அமைந்துள்ள சுவாமி புஷ்கரிணிக் கரையில் உள்ள ஸ்ரீ மலையப்ப ஸ்வாமி மற்றும் அவரது துணைவியார் ஸ்ரீ தேவி மற்றும் பூதேவி ஆகியோருக்கு சிறப்பு அபிஷேகம் பின்னர் சுதர்ஷன சக்கரத்துடன் புஷ்கரிணியில் நீராடல்.அன்று மாலை கொடி இறக்கத்துடன் விழா நிறைவு பெறும்.