மேலும் செய்திகள்
17 மாவட்டங்களில் இன்று கனமழை
04-Apr-2025
மாவட்டத்தில் கோடைமழைஒரே நாளில் 96.80 மி.மீ., பதிவுநாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில், வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் தெற்கு கேரள பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, தமிழகத்தில், ஒரு சில இடங்களில் கனமழையும், பல்வேறு இடங்களில் லேசான மழையும் பெய்து வருகிறது.நாமக்கல் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில், நேற்று முன்தினம் காலை முதல் பரவலாக மழை பெய்தது. அதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளம்போல் பெருக்கெடுத்து ஓடியது. மேலும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் வெகுவாக பாதிக்கப்பட்டது. நேற்று முன்தினம், காலை, 6:00 முதல், நேற்று காலை, 6:00 மணி வரை, 24 மணி நேரம் பெய்த மழை அளவு (மி.மீ.,) பின்வருமாறு: எருமப்பட்டி, 8, குமாரபாளையம், 6.80, நாமக்கல், 10, ப.வேலுார், 5, ராசிபுரம், 29, சேந்தமங்கலம், 4, திருச்செங்கோடு, 12, கலெக்டர் அலுவலகம், 14, கொல்லிமலை, 8, என, மொத்தம், 96.80 மி.மழை பதிவாகி உள்ளது.
04-Apr-2025