மேலும் செய்திகள்
நமக்கு தெரிந்தது கொஞ்சம் தெரியாதது ரொம்ப அதிகம்
6 hour(s) ago
நல்லெண்ண துாதர்! ஜாக்ரஸ்ஸல் டெரியர்
20-Dec-2025
பாலக்காட்டில் டாக் ஷோ!
20-Dec-2025
மடப்புரத்தில் உண்டியல் எண்ணும் பணி
18-Dec-2025
புதுச்சேரி, : முதல்வர் ரங்கசாமி கொண்டு சென்ற கோப்பில் கையெழுத்திட தமிழிசை மறுத்து விட்டார்.கவர்னர் பதவியை ராஜினாமா செய்த தமிழிசைக்கு, வழியனுப்பு அணிவகுப்பு செலுத்தும் நிகழ்ச்சி கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது. முன்னதாக முதல்வர் ரங்கசாமி, கவர்னர் மாளிகையில் தமிழிசையை மரியாதை நிமித்தமாக சந்திக்க சென்றார்.அப்போது தன்னுடன் கோப்பு ஒன்றையும் கொண்டு சென்றார். தமிழிசை தனியாக சந்தித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, தான் கொண்டு வந்த கோப்பில் கையெழுத்திடுமாறு வேண்டுகோள் விடுத்தார்.அதற்கு, 'மன்னிச்சிடுங்க அண்ணா... நான் இப்போது கவர்னராக இல்லை, கையெழுத்து போட்டால் தப்பாகி விடும்' என கூறி புன்னகையுடன் தமிழிசை மறுத்து விட்டார். முதல்வர் ரங்கசாமி, தான் கொண்டு சென்ற கோப்பில் கையெழுத்து வாங்க முடியாமல் அலுவலகம் திரும்பினார்.
6 hour(s) ago
20-Dec-2025
20-Dec-2025
18-Dec-2025