கூடுதல் வசதியுடன் நோக்கியா டேப்லெட்
'நோக்கியா' பிராண்டுக்கான உரிமம் பெற்றுள்ள, 'எச்.எம்.டி.ஐ.குளோபல்' நிறுவனம், இந்தியாவில், 'நோக்கியா டி 10' எனும், டேப்லெட் ஒன்றை கடந்த மாதம் அறிமுகம் செய்தது.அந்த சமயத்தில் இந்த டேப்லெட், 'வைபை' இணைப்பு மட்டுமே கொண்டதாக மட்டுமே அறிமுகம் ஆனது. தற்போது, 4ஜி எல்.டி.இ., நெட்வொர்க் இணைப்பு வசதி கொண்ட மாடல் அறிமுகம் ஆகியுள்ளது.'வைபை ஒன்லி' மாடலில் உள்ள அதே அம்சங்கள், இந்த டேப்லெட்டிலும் இடம்பெற்றுள்ளன. விலை மட்டும் சற்று அதிகமாக உள்ளது.