பயர் - போல்ட் ஸ்மார்ட் வாட்ச்
அண்மை காலமாக இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட் வாட்ச்சுகள் அறிமுகம் ஆகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது 'பயர் -- போல்ட்' நிறுவனமும் புதிதாக ஒரு ஸ்மார்ட் வாட்ச்சை அறிமுகம் செய்துள்ளது.'பயர்-போல்ட் டொர்னாடோ' எனும் பெயரில் இந்த வாட்ச் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.சிறப்பம்சங்கள்• 1.72 அங்குல முழு எச்.டி., டிஸ்ப்ளே• 320x380 பிக்ஸல் துல்லியம்• குயிக் டயல் பேடு• புளுடூத் காலிங் வசதி• கால் ஹிஸ்டரி• 'வாய்ஸ் அசிஸ்டென்ட்' வசதி• இதய துடிப்பு, ஆக்சிஜன், துாக்கம் கண்காணிப்பு• தண்ணீர் அருந்துவதை நினைவூட்டல்• 30 ஸ்போர்ட் மோடுகள்• நீர், துாசி புகாது• 7 நாட்கள் தாங்கும் பேட்டரி• 37 கிராம் எடை• 5 வண்ணங்கள்விலை: 4,999 ரூபாய்