உள்ளூர் செய்திகள்

விலை உயர்ந்த டிவிகள் வி.யு., நிறுவனம் அறிமுகம்

அமெரிக்காவை சேர்ந்த வி.யு., நிறுவனம், புதிதாக ஒரு டிவி வரிசையை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. புதிதாக அறிமுகம் ஆகியிருக்கும் வி.யு., மாஸ்டர்பீஸ் குளோ கியு.எல்.இ.டி., வரிசை டிவிகள், இந்நிறுவனத்தின் விலை உயர்ந்த டிவி மாடல்களாகும். இந்த டிவிகள் 55, 65, 75 அங்குல அளவுகளில் வந்துள்ளன. மேலும் இவை 3 ஜி.பி., ரேம் மற்றும் 16 ஜி.பி., சேமிப்பு வசதியுடன் வந்துள்ளது.இதில் 100 வாட் அர்மானி கோல்டு 4.1 சேனல் சவுண்டு சிஸ்டமும் உள்ளது. இந்நிறுவனம் இரண்டு ஆண்டுகளுக்கு முன் 85 அங்குல டிவி மாடலை அறிமுகம் செய்தது. அதன் பின் இப்போது, இந்த டிவிகளை அறிமுகம் செய்துள்ளது.55 அங்குலம்: 74,999 ரூபாய்65 அங்குலம் : 99,999 ரூபாய்75 அங்குலம்: 1.80 லட்சம் ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !