கேலக்ஸி வாட்ச்: கவனம்
'சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4' சீரிஸ், 'கூகுள்' உடன் இணைந்ததை அடுத்து, ஐ.ஓ.எஸ்., சாதனங்களை இந்த வாட்ச் சப்போர்ட் செய்யாது என கூறப்படுகிறது. சந்தையில் இந்த ஸ்மார்ட்வாட்ச்சை வாங்கும்போது சற்று கவனித்து வாங்குமாறு, இணையதளங்களில் தெரிவிக்கப்படுகிறது.கேலக்ஸி வாட்ச் 4 சீரிஸ் கையேட்டில், ஐ.ஓ.எஸ்., சாதனங்களுடன் செயல்படுமா என்பது குறித்து எந்த தகவலும் இடம்பெறவில்லை. கடந்த 11ம் தேதியன்று, சாம்சங் நிறுவனம், 'சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4' மற்றும், 'சாம்சங் கேலக்ஸி வாட்ச் 4 கிளாஸிக்' என, இரு மாடல்களை அறிமுகம் செய்தது.இவை ஐ.ஓ.எஸ்., சாதனங்களை சப்போர்ட் பண்ணுமா என்பதில் கேள்வி எழுந்துள்ளதால், சாம்சங்கின், 'கேலக்ஸி வாட்ச் 3' உள்ளிட்ட வேறு மாடல் ஸ்மார்ட்வாட்சுகளை வாங்குமாறு விமர்சகர்கள் கூறுகிறார்கள். கேலக்ஸி வாட்ச் 4 விலை, மாடல்களை பொறுத்து 18,600 ரூபாயில் துவங்கி 29,700 ரூபாய் வரை ஆகிறது.