கார்மின் ஸ்மார்ட் வாட்சுகள்
கார்மின் நிறுவனம், அமெரிக்காவில் இரண்டு புதிய ஸ்மார்ட்வாட்சுகளை அறிமுகம் செய்துள்ளது. இந்த வாட்சுகளில் வழக்கமான சிறப்புகளுடன் கூடுதலாக ஒன்று உள்ளது. நம் உடல் செயல்பாடுகளை சர்வே செய்து தருவது தான் அது.'கார்மின் வெனு 2' மற்றும் 'கார்மின் வெனு 2 எஸ்' ஆகிய இந்த இரண்டு வாட்சுகளுக்கிடையே இருக்கும் பெரிய வித்தியாசம், அதன் டயல் அளவு மட்டுமே. 'வெனு 2' வாட்ச் டயல், 45 மி.மீ., அளவும்; 'வெனு 2 எஸ்' வாட்ச் டயல், 40 மி.மீ., அளவும் கொண்டதாகும்.இரண்டின் விலையும், இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட, 30 ஆயிரம் ரூபாய் ஆகிறது.