கூகுள் காண்டாக்ட்ஸ் புதிய வசதி அறிமுகம்
'கூகுள்' நிறுவனம், 'ஆண்ட்ராய்டு' இயங்குதளத்தில் 'கூகுள் காண்டாக்ட்ஸ்' பகுதியில், புதிய 'இல்லஸ்ட்ரேஷன்' வசதியை அறிமுகம் செய்துள்ளது.இதனால், ஆண்ட்ராய்டு பயனர்கள், தங்கள் விருப்பப்படி, 'புரொபைல்' படங்களை உருவாக்கி கொள்ள முடியும். காண்டாக்ட் பகுதியை 'எடிட்' செய்யும்போது இந்த கூகுள் இல்லஸ்ட்ரேஷன் வசதி கிடைக்கும். ஏற்கனவே, ஜிமெயிலில் இந்த வசதியை, கடந்த 2021ல் கூகுள் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.