உள்ளூர் செய்திகள்

இன்ஸ்டாகிராமில் நீக்கியதை திரும்ப மீட்பது எப்படி?

சமூக வலைதளமான, 'இன்ஸ்டாகிராமில்' நாம் நீக்கியவற்றை மீண்டும் பெற விரும்பினால், அதற்கான வசதியும் அதில் இருக்கிறது.இன்ஸ்டாகிராமில் ஏதாவது ஒரு படத்தையோ அல்லது வீடியோவையோ, ரீலையோ நாம் 'டெலிட்' செய்துவிட்டால், அது, உடனே டெலிட் ஆகிவிடாமல், 'ரீசன்ட்லி டெலிட்' எனும் போல்டருக்கு சென்றுவிடும். அங்கு அது 30 நாட்கள் வரை சேமித்து வைக்கப்படும்.அதனால், நாம் அதற்குள் டெலிட் செய்தவற்றை மீட்டெடுத்துவிட முடியும்.ஆனால் வீடியோ, ரீல்கள், படங்கள் போன்றவற்றை மட்டுமே மீட்டெடுக்க முடியும். குறுஞ்செய்திகளை மீட்டெடுக்க இயலாது.நாம் நீக்கிய ஒன்றை திரும்ப பெற, நம்முடைய 'புரொபைல்' பகுதிக்கு சென்று, 'ரீஸ்டோர்' செய்து கொள்ளலாம் அல்லது நிரந்தரமாக நீக்கவும் செய்யலாம். 'ஆண்ட்ராய்டு' மற்றும் 'ஐபோன்' இரண்டிலும் இந்த வசதி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !