உள்ளூர் செய்திகள்

மெக்கானிக்கல் கேமிங் கீ போர்டுகள்

'லாஜிடெக்' நிறுவனம், இந்தியாவில் இரண்டு வகையான 'மெக்கானிக்கல் கேமிங் கீ போர்டு'களை அறிமுகம் செய்துள்ளது.ஜி 413 எஸ்.இ., மற்றும் ஜி 413 டி.கே.எல்., எஸ்.இ., என, இரண்டு மெக்கானிக்கல் கேமிங் கீ போர்டுகள் அறிமுகம் ஆகியுள்ளன. இந்த கீ போர்டுகள், 'பி.பி.டி., கீ கேப்ஸ்' மற்றும் அலுமினியம் 'டாப் கேஸ்' ஆகியவற்றுடன் வந்துள்ளன. மேலும், கண்ணைக் கவரும் விதமாக, வெள்ளை எல்.இ.டி., 'பேக்லைட்டிங்'கும் வழங்கப்பட்டு உள்ளது.இந்த கீ போர்டுகளை, 'விண்டோஸ் 10' அல்லது அதற்கு பிறகு வந்தவற்றுடன் பயன்படுத்த முடியும். இவை எளிதில் வெப்பமடையாது. பல பட்டன்களை ஒரே சமயத்தில் அழுத்தி பயன்படுத்த முடியும். விலை:ஜி 413 எஸ்.இ., : 6,495 ரூபாய்ஜி 413 டி.கே.எல்., எஸ்.இ., : 5,895 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !