மைக்ரோமேக்ஸ் மாடல்கள்
மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின், 'இன் 1பி' எனும், புதிய ஸ்மார்ட்போன் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இரண்டு மாடல்களில் வரும் இந்த போனில், 2 ஜி.பி., ரேம்; 32 ஜி.பி., சேமிப்புத் திறன் கொண்ட மாடலில், 'ஆண்ட்ராய்டு 10 கோ' இயங்குதளமும்; '4 ஜி.பி., ரேம்; 64 ஜி.பி., சேமிப்புத் திறன் கொண்ட மாடலில், வழக்கமான ஆண்ட்ராய்டு, 10 இயங்குதளமும் இருக்கும்.6.52 அங்குல திரை கொண்ட இந்த போன்களில், 5,000 எம்.ஏ.எச்., பேட்டரி இருப்பது கூடுதல் சிறப்பு.