அமேசான், க்ரோமா கூட்டில் புதிய பயர் டிவிகள்
'அமேசான்' மற்றும் 'டாடா' குழுமத்துக்கு சொந்தமான, 'க்ரோமா' ஆகியவை இணைந்து, 'பயர்' சாதனத்துடன் கூடிய, 'ஸ்மார்ட் டிவி' வகைகளை அறிமுகம் செய்துள்ளன.இந்த, 'டிவி'களில், அமேசானின், 'பயர் டிவி' சாதனம் உள்ளே அமைக்கப்பட்டே வருகிறது. இதன் வாயிலாக, 5 ஆயிரம் ஓ.டி.டி., தளங்களை எளிதாக அணுக இயலும்.மேலும், 32 அங்குலத்திலிருந்து, 55 அங்குலம் வரை, பல அளவுகளில் கிடைக்கிறது. எச்.டி., மற்றும் 4கே ஆகிய இரு தேர்வுகளிலும் கிடைக்கிறது. இந்த, 'டிவி'களின் விலை, 17,999 ரூபாயில் துவங்குகிறது.