உள்ளூர் செய்திகள்

பிலிப்ஸ் பியூச்சர் போன்கள்

இந்தியாவில், பியூச்சர் போன்களுக்கான தேவை எப்போதும் உள்ளது. குறிப்பாக, கிராமப்புறங்களில் இத்தகைய போன்களுக்கான தேவை மிகவும் அதிகமாக இருக்கிறது.'நோக்கியா, லாவா, ஐடெல், ரிலையன்ஸ் ஜியோ' போன்ற பல நிறுவனங்கள், பியூச்சர் போன்களை அறிமுகம் செய்து வருகின்றன.இந்த வகையில் தற்போது, 'பிலிப்ஸ்' பிராண்டு உரிமம் பெற்ற, 'டி.வி.பி., டெக்னாலஜி' நிறுவனம், இந்தியாவில் மூன்று பியூச்சர் போன்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த போன்கள், 'இ' வரிசையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. 'பிலிப்ஸ் ஜெனியம் இ 209, பிலிப்ஸ் ஜெனியம் இ 125, பிலிப்ஸ் இ 102 ஏ' என மூன்று போன்கள் அறிமுகம் ஆகியுள்ளன.

பிலிப்ஸ் ஜெனியம் இ 209

2.4 அங்குல திரை1,000 எம்.ஏ.எச்., பேட்டரிபுளுடூத் 3.0டார்ச்விலை: 2,999 ரூபாய்

பிலிப்ஸ் ஜெனியம் இ 125

1.77 அங்குல திரை2,000 எம்.ஏ.எச்., பேட்டரிமியூசிக் பிளேயர்இரண்டு சிம்விலை: 2009 ரூபாய்

பிலிப்ஸ் இ 102 ஏ

1.77 அங்குல திரை1,000 எம்.ஏ.எச்., பேட்டரிபுளுடூத் 2.1இரண்டு சிம்கேம் வசதிமியூசிக் பிளேயர்விலை: 1,399 ரூபாய்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !