பிலிப்ஸ் ஒயர்லெஸ் இயர்போன்
'பிலிப்ஸ்' நிறுவனம், இந்தியாவில் தொடர்ந்து பல இயர்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக தற்போது பிலிப்ஸ் டி.ஏ.டி., 4,506 பி.கே., எனும், ட்ரூ ஒயர்லெஸ் இயர்போனை அறிமுகம் செய்துள்ளது.இதில் வெளிப்புற சப்தங்களை கட்டுப்படுத்தும் ஏ.என்.சி., எனும், ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங் வசதியும் உள்ளது.சிறப்பம்சங்கள்மழை நீர் புகாமல் தடுக்கும்ஏ.என்.சி., வசதிடச் கன்ட்ரோல்10 மி.மீ., டிரைவர்கள்5.0 புளுடூத் இணைப்பு30 அடி தூரம் வரையிலான இணைப்பு18 மணி நேரம் தாக்குப் பிடிக்கும்.விலை: 7,099 ரூபாய்.