சாம்சங் கேலக்ஸி எஸ் 23 பிப்ரவரியில் அறிமுகம்
'சாம்சங்' நிறுவனம் ஒருவழியாக அதன் 'கேலக்ஸி' சாதனங்களை அறிமுகம் செய்யும் தேதியை அறிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியின் போது, 'சாம்சங் கேலக்ஸி எஸ் 23 சீரிஸ்' போன்களையும் அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா பாதிப்புகளை அடுத்து, மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முதன் முறையாக, அரங்கில் நேரிடையாக அறிமுக விழா நடைபெறுகிறது. பிப்ரவரி முதல் தேதியன்று சான் பிரான்சிஸ்கோ நகரில் அறிமுக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சி, யு - டியூப் சேனலில் நேரலையாகவும் ஒளிபரப்பாக உள்ளது.