படுத்துக் கொண்டே விளையாடலாம்
ஜப்பானில் உள்ள நிறுவனம் ஒன்று, வீடியோ கேம்ஸ் விளையாடுபவர்களுக்கு என்றே ஸ்பெஷலாக ஒரு படுக்கையை தயாரித்துள்ளது.உலகில் அதிகமான வீடியோ கேம் விளையாடுபவர்களைக் கொண்ட ஜப்பானில், இந்த எலக்ட்ரிக் கேமிங் படுக்கைக்கு நல்ல வரவேற்பு.அதுமட்டுமின்றி; இந்த வீடியோ கேமிங் பெட்டுக்கு ஏற்றவாறு மேஜை, ஷெல்ப் என உதிரி ஐயிட்டங்களையும் அறிமுகம் செய்துள்ளது. இதனால், படுக்கையை விட்டு எழுந்திருக்காமல் விளையாடலாம், துாங்கலாம், அலுவலக வேலைகளை செய்யலாம், சாப்பிடலாம்!அத்துடன், 200 கிலோ எடை கொண்டவர்கள் கூட, இதை எளிதாக பயன்படுத்தலாம்.விலை: 35,000 ரூபாய்.