உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / நீட் எதிர்ப்பு போராட்டம்: மத்திய அரசு முடிவு சரியே!

நீட் எதிர்ப்பு போராட்டம்: மத்திய அரசு முடிவு சரியே!

மருத்துவ படிப்பில் சேருவதற்கான, 'நீட்' மற்றும் அரசு வேலைகளில் சேருவதற்கான நுழைவு தேர்வுகளில், கேள்வித்தாள் கசிவு சம்பவங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகவும், புதிதாக உருவான கரப்பான் பூச்சி ஜனதா கட்சி குற்றம் சாட்டியது.'தேர்வு முறைகளில் சீர்திருத்தம் வேண்டும்; மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிமானா செய்ய வேண்டும்' என்ற கோரிக்கைகளை முன்வைத்து, அக்கட்சியினர் டில்லியில் கடந்த சில நாட்களாக போராட்டம் நடத்தினர்.இந்தச் சூழ்நிலையில், கடந்த வாரம் பார்லிமென்டின் மழைக்கால கூட்டத்தொடர் துவங்கியது. அப்போது, போராட்டக்காரர்கள் ஜந்தர் மந்தர் பகுதியில் திரண்டு, பார்லிமென்டை நோக்கி பேரணியாக செல்ல முயன்ற நிலையில், அவர்களை போலீசார் தடுக்க முற்பட நிலைமை பதற்றமானது; வன்முறை வெடித்தது. தடியடி, கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டதால், பார்லிமென்டை சுற்றியுள்ள பகுதிகள் போர்க்களம் போல காட்சியளித்தன. போலீசாரின் தடியடியில் பலர் காயம் அடைந்தனர்.சமீபத்திய நீட் தேர்வு வினாத்தாள் கசிவு உட்பட, தொடர்ந்து நிகழ்ந்து வரும் வினாத்தாள் கசிவு சம்பவங்கள், 12க்கும் மேற்பட்ட மாணவர்களின் தற்கொலைக்கு காரணமாக அமைந்தது என்பதால், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினரின் போராட்டம் நியாயமானதே என, எதிர்க்கட்சிகளும் அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தன. அவர்களுடன் போராட்டத்திலும் பங்கேற்றன.பிரச்னை தீவிரம் அடைந்த நிலையில், வினாத்தாள் கசிவுக்கு காரணமானவர்களை கைது செய்து விட்டதாக, மத்திய அரசு பதில் அளித்தாலும், அதில் போராட்டக்காரர்கள் திருப்தி அடையவில்லை. வினாத்தாள் கசிவு குளறுபடிகளுக்கு தார்மீக பொறுப்பேற்று, கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதில், போராட்டக்காரர்கள் பிடிவாதமாக இருந்தனர்.நாளுக்கு நாள் இவர்களின் போராட்டம் வலுவடைந்ததுடன், தமிழகம் உட்பட பல மாநிலங்களில் இந்த போராட்டத்திற்கு ஆதரவாக ஏராளமான மாணவர்கள் களத்தில் குதித்தனர்.பயங்கரவாதிகள் மற்றும் தேசவிரோத சக்திகளின் துாண்டுதலில் போராட்டம் நடப்பதாக, தர்மேந்திர பிரதான் குறிப்பிட்ட போதும், நிலைமையில் மாற்றம் ஏற்படவில்லை. மாறாக, அவரது அறிவிப்பு மாணவர்கள் மற்றும் போராட்டக்காரர்கள் மத்தியில் ஆத்திரத்தையே ஏற்படுத்தியது.வினாத்தாள் கசிவு விவகாரம் நிர்வாக ரீதியான தோல்வி என்பதை தாண்டி, கல்லுாரிக்கு பிந்தைய வாழ்க்கை மற்றும் மாணவர்களின் வேலைவாய்ப்பில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை, மத்திய அரசும் தாமதமாக உணரத் துவங்கியது. மாணவர்களின் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டிய கட்டாயமும் உருவானது.அதனால், கரப்பான் பூச்சி ஜனதா கட்சியினர் மற்றும் மாணவர்களின் போராட்டங்களின் நம்பகத்தன்மையை குறைக்கும் மற்றும் ஒடுக்கும் முயற்சிகள் நிறுத்தப்பட்டு, மத்திய அரசு பேச்சு நடத்த முன்வந்தது. கடந்த சனிக்கிழமை நடந்த பேச்சில் முன்னேற்றம் ஏற்பட்டதை அடுத்து, மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். இதையடுத்து, போராட்டக்காரர்களின் வேறு சில கோரிக்கைகளும், விதிமுறைகளின்படி பரிசீலிக்கப்படும் என்று அறிவித்ததால், போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, டில்லி மாநகரில் அமைதி திரும்பியது.இது, மத்திய அரசுக்கு பின்னடைவு என்று சில தரப்பில் கூறப்பட்டாலும், மாணவர்களின் உணர்வுகளுக்கு அரசு மதிப்பளித்துள்ளது என்றே கூறலாம். அத்துடன், வினாத்தாள் கசிவு பிரச்னைகளை தடுக்க, மோடி அரசு பார்லிமென்டில் சட்ட திருத்த மசோதா நிறைவேற்ற முற்பட்டுள்ளதும் வரவேற்கத்தக்கதே.தொழில்நுட்பம் முன்னேற்றம் அடைந்துள்ள சூழ்நிலையில், மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கியமான தேர்வுகளில், இனியும் தவறுகள் நடக்காத வகையில் கடும் விதிமுறைகளை அரசு வகுப்பதுடன், குறைபாடுகளை சரி செய்வதும் அவசியமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 15 )

V.Mohan
ஜூலை 27, 2026 22:47

சும்மா மாணவரா போராட்டம் என்பது டுபாக்கூர் வேலை. பொதுநல மனு தாக்கல் செய்து பிரபலமான கரபாபான் பூச்சி தலைவர், ஏன் நீட் தேர்வை நீக்க வேணும் என்று உச்சநீதிமன்றத்தில்மனு செய்யவில்லை??, தேர்வை நீக்க தீர்ப்பை வாங்கியிருந்தால் இத்துணை பிரச்னை வந்திருக்காது. வெளிநாட்டினர் சதிசெய்து ,CJP உள்ளே நுழைநது பங்களாதேசத்தினர்,நேபாளிகள் உள்ளே நுழைந்து ஆர்பபாட்டம நாட்டை கவிழ்க்க சதி


ஆரூர் ரங்
ஜூலை 27, 2026 14:46

போராட்டதுக்கு ஆதரவு தெரிவித்த கெஜரிவால் மற்றவர்களைப் போல JEE நுழைவுத்தேர்வு எழுதாமல் பின்வாசல் வழியாக ஐஐடி யில் இடம் பிடித்தவர். அவர் நுழைவுத் தேர்வை எதிர்ப்பது வேடிக்கை


kannan
ஜூலை 27, 2026 14:12

வரலாறு திரும்புகிறது. ஒருகாலத்தில் அன்னா ஹசாரே இயக்கத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி காங்கிரஸ் ஆட்சியை பலவீனப்படுத்தியதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இன்று அதேபோல், எதிர்க்கட்சிகள் Chief Justice Party விவகாரத்தை அரசியல் ஆயுதமாக மாற்றி பாஜகவை தற்காப்பு நிலைக்கு தள்ளியிருக்கின்றன என்ற விமர்சனமும் எழுகிறது. கடந்த 12 ஆண்டுகளில், எப்போது போராட்டம் , நாடாளுமன்றம் பரபரப்பாக நடந்நாலோ வெளிநாட்டு சுற்றுலா நடந்தது. ஆனால் இந்த முறை அப்படி இல்லை. அதற்கு பதிலாக, இரவு நேர சமூக வலைதள லைவ், தொடர்ந்து விளக்கங்கள், அரசியல் பதிலடிகள் என களம் மாறியிருக்கிறது. “குரங்கு குளியல் - 8 மணி ஒருவழிப்பாதை வானொலி நிகழ்ச்சி” என்ற நிலைக்கு பதிலாக, நள்ளிரவு சமூக வலைதள லைவ் வரை வந்திருப்பது அரசியல் அழுத்தத்தின் அறிகுறியா? இவை அனைத்தையும் பார்க்கும்போது, “வாய்மையும் வெல்லும்” என்ற நம்பிக்கை மீண்டும் உருவாகிறதோ?


Sathyanarayanan Sathyasekaren
ஜூலை 27, 2026 14:26

தற்போது கற்பன்பூசி நடக்கும் போராட்டம் உண்மையானதா? இதற்கு பதில் சொல்லுங்கள்.


kannan
ஜூலை 27, 2026 16:59

சத்யா, போராட்டத்தில் உண்மையில்லை என்றால் அமைச்சர் ராஜீனாமா செய்வாரா? பாஜக ஒன்றும் சாதாரண கட்சி கிடையாது, போராட்டத்துக்கைல்லாம் ராஜீனாமா செய்யும் ஆப்பு சூப்பான கட்சிகிடையாது, போராட்டத்துக்கெல்லாம் பயப்படும் கட்சிகிடையாது, அதுவும் அமைச்சர் ராஜீனாமா இந்த கரப்பான்பூச்சிக் கட்சிக்கெல்லாம் செய்வார்களா? இருந்தும் செய்திருக்கிறார்கள் என்றால் என்ன அர்த்தம் ? ஒன்று அமைச்சர் தவறானவர் அல்லது கரப்பான்பூச்சி சரியானது . இரண்டில் ஒன்று இருந்தால் தான் அவர்கள் ராஜினாமா செய்வார்கள், இரண்டில் எது சரி?


gopi
ஜூலை 27, 2026 17:26

கண்ணனுக்கு எவளோ அறிவு


Yuvaraj Velumani
ஜூலை 27, 2026 18:02

ராமர் கோவில் மற்றும் சாமி பற்றி கேவலமாக பேசினால் நீ கம்முன்னு இருப்பாய் ஏனென்றால் நீ 200 உபி


Tetra
ஜூலை 27, 2026 13:44

போராட்ட கரப்பானகள்ல 2 பேர் கூட மாணவன் கிடையாது. பொறுக்கிகளும் ரவுடிகளும்தான். அந்த பொறுக்கிகள் இல் எத்தனை பேர் உண்மையாக பாதிக்கப்பட்டவர்கள் இருந்தார்கள். பொறுபாபுள்ள இந்திய மாணவன் எவனும் அதுவும் அறிவு தேடலில் இருப்பவன் எவனும் போராட்டம் நடத்த மாட்டான்


kannan
ஜூலை 27, 2026 14:54

ஆளும் கட்சிக்கு எதிரான கருத்து இருந்தால் அதை நாட்டுக்கு எதிரானவர்களைப் போல சித்தரிக்கும் கயவர்களுக்கு விழுந்த செருப்படி தான் இந்த ராஜினாமா என்று முட்டாள்களுக்குப் புரியாது


krish
ஜூலை 27, 2026 17:30

முட்டளாக இருக்கும் kannan, பஞ்சாப் அரியானா தேர்வில் நடந்த முறைகேடு பற்றி கேட்டவுடன் கரப்பான் கூட்டம் ஓடிவிட்டது


chennai sivakumar
ஜூலை 27, 2026 12:18

யோகி அவர்களே இதற்கு சரியானவர்.


அம்பி குமார் பாலக்காடு
ஜூலை 27, 2026 08:18

மீண்டும் வேறு கோரிக்கையுடன் கரப்பான் பூச்சி போராட ரோட்டுக்கு வந்தால் அதற்கும் மத்திய அரசு சமாதானம் புறாவை பறக்க விடுமா ?? மத்திய அரசு மோடிஜி அரசு கரப்பான் பூச்சியுடன் சமாதானம் செய்தது தவறான செயல் பாக்கிஸ்தானை சிந்தூர் நடவடிக்கை மூலம் அடக்க தெரிந்த மோடி ஜிக்கு கரப்பான் பூச்சியை ஏன் அடக்க முடியவில்லை ?? சமாதானம் புறாவை எதற்கு பறக்க விட வேண்டும் ?? ஜெயலலிதா ஜி இருந்தால் கரப்பான் பூச்சி கூட்டத்தை அழித்து இருப்பார் ஜெயலலிதா ஜி தைரியம் மோடிஜிக்கு இல்லை இந்த மாதிரி போராட்டம் செய்பவர்களுக்கு ஜெயலலிதா ஜி தான் சரியான நிர்வாக தலைவர்


nathan
ஜூலை 27, 2026 14:06

ஆனால், பாருங்க. காங்கிரஸ ஆட்சிலயும், இவங்க போராட்டம் பண்ணித்தான் , ஆட்சிக்கு வந்தாங்க. வினாத்தாள் கசிவுங்கறது, இவங்க ஆட்சில, இது முதல் தடவை இல்ல. எவன் என்ன பண்ண முடியங்கிற நினைப்பு.ஊர்பட்ட தடவை நடந்த தப்பை ஒத்துக்க வைக்க,. உண்ணாவிரதம், போராட்டமெல்லாம் தேவைப்படுது,.


S. Venugopal
ஜூலை 27, 2026 08:14

இந்த குழு அமைத்தது பாராட்டத்தக்கது. இந்த குழுவில் ஜேஈஈ JEE மற்றும் அகில இந்திய அளவில் நடத்தப்பட்ட மருத்துவ நுழைவுத்தேர்வினில், PMPD, மூலம் உயர் கல்வி கழகங்களில் இளநிலை பட்டப் படிப்புகளில் சேர்ந்து தற்பொழுது அகில இந்திய அளவில் நிபுனர்களாக உள்ளவர்களையும் இணைத்தால் நன்று.


Prem Kumar
ஜூலை 27, 2026 03:41

ராகுல் போன்ற ஆட்சி அதிகார பசியில் உலா வரும் காங்கிரஸ் தலைவர்கள், மோடி அரசாங்கத்தை அகற்றுவது இப்போது தங்களுக்கு மிக எளிதான காரியம் என்று கூறுகின்றனர். ஜனநாயக ரீதியாக தேர்தல் மூலம் பிரதமரை எதிர்கொள்ள தைரியம் இல்லாத இந்த தலைவர்கள் தான் மாணவர், விவசாயிகள் அரசு ஊழியர்கள் என ஒவ்வொரு பிரிவு மக்களையும் தேடிப் போய் அவர்களை மோடி அரசுக்கு எதிராக பலகீனமான பிரச்சனைகளுக்காக போராட அல்லது கிளர்ச்சி நடத்த தூண்டுவதும் அந்த போராட்ங்களை வழி நடத்துவது போன்ற கீழ்த்தரமான தவறான மாற்று வழிகளை தேர்வு செய்து உள்ளார்கள். அவைகளை ஆதரவளிப்பது போல் நாடகமாடி நாடாளுமன்றத்தை தொடர்ந்து செயல்பட விடாமல் முடக்குவது மட்டுமே தங்கள் முன்னால் உள்ள ஒரே வழி என அவர்கள் நிணைக்கிறார்கள். பல்வேறு காரணங்களுக்காக காங்கிரஸ் மற்றும் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி (UPA) ஆட்சி காலத்தில் 12 அமைச்சர்கள் பதவி விலகிய போது, ​​அப்போதைய எதிர்க்கட்சிகள் பிரதமரின் ராஜினாமாவை கோரவோ அல்லது நாடாளுமன்ற கூட்டத் தொடரை நீண்ட காலத்திற்கு முடக்கவோ முயற்சிக்க வில்லை. இன்றைய நிலையில் நம் இந்திய திருநாட்டையும் நம் மக்களையும் நல்வழியில் நடத்தி செல்ல ஆற்றல் படைத்த ஒரே தலைவராக மோடி மட்டுமே திகழ்கிறார் என்பதை நமது மக்கள் மட்டுமல்ல பல உலகத் தலைவர்களும் கூட ஏற்று கொண்டுள்ளார்கள்.