உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் /  பீஹார் தேர்தல் வெற்றி: நிதிஷ் நீடிக்க ஆதரவு!

 பீஹார் தேர்தல் வெற்றி: நிதிஷ் நீடிக்க ஆதரவு!

பீஹார் மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், பா.ஜ., - ஐக்கிய ஜனதா தளம் - லோக் ஜனசக்தி உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்ற தேசிய ஜனநாயக கூட்டணி, அமோக வெற்றி பெற்றுள்ளது. மொத்தமுள்ள 243 தொகுதிகளில், தே.ஜ., கூட்டணி மட்டும் 202 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. எதிர்க்கட்சியான மஹாகட்பந்தன் கூட்டணி, 35 இடங்களை மட்டுமே பிடித்து படுதோல்வி அடைந்துள்ளது. இதர கட்சிகள் ஆறு இடங்களை பிடித்துள்ளன. அதே நேரத்தில், 2020 சட்டசபை தேர்தலை ஒப்பிடுகையில், தே.ஜ., கூட்டணி 80 இடங்களில் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளது. இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி வாயிலாக, முதல்வர் நிதிஷ் குமார் மீண்டும் முதல்வராக தொடர்வதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. ஓட்டுப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளில் எல்லாம், தே.ஜ., கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும். 140க்கும் மேற்பட்ட தொகுதிகளை அக்கூட்டணி பிடிக்கும் என்று தான் கூறியிருந்தன. ஆனால், 200க்கும் மேற்பட்ட தொகுதிகளை தே.ஜ., கூட்டணி பிடித்திருப்பது, பலரையும் வியப்படைய வைத்துள்ளது. பீஹாரில் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன், மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். இதன் வாயிலாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு, சுய தொழில் துவங்க, தலா, 10,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது. இந்த திட்டத்தில் இணைந்து சாதனை படைக்கும் பெண்களுக்கு, கூடுதலாக, 2 லட்சம் ரூபாய் வரை நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் அறிவித்திருந்தது, தே.ஜ., கூட்டணிக்கு பெருமளவு கைகொடுத்து உள்ளது. பல தொகுதிகளில் மகளிர் ஓட்டுகள் அதிக அளவில் பதிவாகி, அதுவே ஆளும் கூட்டணி அபார வெற்றி பெற காரணமாகி உள்ளது என்றால் மிகையில்லை. அதே நேரத்தில், எஸ்.ஐ.ஆர்., எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு எதிராகவும், ஓட்டு திருட்டு குற்றஞ்சாட்டியும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ராகுலும், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தைச் சேர்ந்த தேஜஸ்வி யாதவும் மேற்கொண்ட தீவிர பிரசாரங்களும், நடத்திய பேரணிகளும் பெரிய அளவில் பலன் தரவில்லை. பீஹார் வாக்காளர்கள் அவற்றை புறந்தள்ளி விட்டனர் என்றே சொல்லலாம். மேலும், பீஹாரில் உள்ள உயர் ஜாதியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிரிவினர் மற்றும் தலித் ஓட்டுகளை ஒன்றிணைப்பதில் தே.ஜ., கூட்டணி திறமையாகச் செயல்பட்டதும், முஸ்லிம்கள் மற்றும் யாதவ இன மக்களின் ஓட்டுகள் பிரிந்ததும், எதிர்க்கட்சிகள் படுதோல்விக்கு காரணமாகி விட்டன. ஜாதி ரீதியான ஓட்டுகள் தங்களுக்கு கைகொடுக்கும் என்ற அவர்களின் நம்பிக்கையையும் பொய்யாக்கி விட்டது. 'கடந்த 2020 சட்டசபை தேர்தலில், தே.ஜ., கூட்டணி வெற்றி பெற்றாலும், அது பெரிய வெற்றியல்ல. எனவே, அப்போது நிகழ்ந்த தவறுகளை எல்லாம், இந்த தேர்தலில் தே.ஜ., கூட்டணி சீர் செய்ததுடன், முன்னதாகவே கூட்டணி பேச்சுகள் மற்றும் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து களம் கண்டதும், திறமையான பூத் அளவிலான மேலாண்மையும் நல்ல வெற்றிக்கு காரணமாக அமைந்துள்ளது' என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள். அத்துடன், பீஹாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலுவும், அவரது மனைவி ரப்ரி தேவியும் மாறி மாறி, 15 ஆண்டுகள் நடத்திய ஆட்சியில், தொடர் படுகொலை, பணத்துக்காக கடத்தல், மோசமான சுகாதாரம், மாநில வளர்ச்சி வீழ்ச்சி என, பல வகையிலும் மக்கள் கஷ்டங்களை அனுபவித்த சூழ்நிலையே இருந்தது. இதனால், அவர்களது ஆட்சியை, 'காட்டாட்சி' என்றே பலரும் விமர்சித்தனர். அந்த காட்டாட்சி என்ற வார்த்தையை, பிரதமர் மோடி, முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர், தேர்தல் பிரசாரத்தில் பயன்படுத்தி, மக்களுக்கு பழைய விஷயங்களை நினைவுபடுத்தியதும், அவர்களின் வெற்றியை எளிதாக்கியுள்ளது. மொத்தத்தில், 'முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஆட்சி தொடர வேண்டும்' என்ற எண்ணத்தில் மக்கள் அளித்த அமோக ஆதரவே, இந்த வெற்றிக்கு முக்கிய காரணம். மக்களின் நம்பிக்கையை, புதிதாக அமையவுள்ள தே.ஜ., கூட்டணி அரசு காப்பாற்றும் என நம்பலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Appan
நவ 17, 2025 21:34

தேர்தலுக்கு ஒரு வாரத்திற்கு முன் ஆளும் பிஜேபி கூட்டணி 1.5 கோடி மகளிர்க்கு தலா ரூ 1௦௦௦௦/பத்தாயிரம் அவர்களின் வாங்கி கணக்கு போட்டது. அதுவும் தேர்தல் விதி முறை இருக்கும் பொது பிஜேபி அரசு செய்ததது, இது அரசுஉ அதிகாரத்தை துஸ்பிரயோகம் இல்லையா...? 1. 5 கோடி பெண்களின் ஓட்டுக்களை தேர்தலுக்கு மூனே பிஜேபி வாங்கி விட்டது. இந்த யுக்தி திமுக தான் செய்து வருகிறது. இப்போ பிஜேபியும் செய்ய தொடங்கி விட்டது.பிஹாரில் சுமார் ஒரு கோடி மக்கள் வாழ்வை தேடி பிற மாநிலங்களுக்கு குடி பெயர்ந்து உள்ளங்கள். அவ்வளவு வறுமை. உலக புகழ் பெற்ற நாளந்தா பல்கலை கழகம் இருந்த இடம் இப்போ வறுமை, அறியாமை உள்ள இடமாக மாறிவிட்டது. இந்திய சரித்திரத்தில் பிஹார் ஒரு முக்கிய இடமாக இருந்தது. வர்றதா கங்கை பாயும் மாநிலம் எப்படி உள்ளது என்று பாருங்கள்.


ஆரூர் ரங்
நவ 17, 2025 14:56

உதயநிதியின் சனாதன அவமதிப்பு பேச்சும் மற்ற திமுக தலைவர்கள் பிகார் உழைப்பாளிகளை கீழ்தரமாக பேசிய பேச்சுக்களும் புள்ளி.... ராஜா கூட்டணிக்கு ஆப்பு வைத்துவிட்டது.விரைவில் இதே வீடியோக்க‌ள் மற்ற வட மாநிலங்களில் பரப்பப்படும். காந்தி காங்கிரசை கலைக்கச் சொன்னார். தி.மு.க அதை நிறைவேறுகிறது.


Raman
நவ 17, 2025 10:24

PM Modi may please be requested to bring such welfare schemes, self-employment for tamilnadu women, ensuring funds and job opportunities directly reaching them, also to ensure majority of their respective alcohol addicted husbands not grabbing the welfare funds or job schemes., better choice is a job which could women especially those are financially in bad shape receiving permanent revenue for years ...


naranam
நவ 17, 2025 05:24

தமிழகத்திலும் இதே போன்ற ஆட்சி மாற்றம் ஏற்படும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தேசிய ஜனநாயகக் கூட்டணி தமிழகத்திலும் தான் செயல் பாடுகளை இப்போதிலிருந்தே பலப்படுத்த வேண்டும். கிறிஸ்தவர்களின் வாக்குகள் விஜய்க்கும் இஸ்லாமியர்களின் வாக்குகள் திமுக அதிமுக எனப் பிரிந்து செல்லக் கூடும். ஆகவே தேமுதிக ஓபிஎஸ் போன்றவர்களை தேஜ கூட்டணியில் இணைத்துக் கொண்டால் வெற்றி வாய்ப்புக் கூடும். காங்கிரசால் அராஜகத் திமுகவுக்கு பலத்த தோல்வியே மிஞ்சும்.


Indian
நவ 17, 2025 07:05

யார் சொன்னது கிறிஸ்தவர்கள் வாக்கு விஜய் என்று. கிறிஸ்தவர்கள் தி மு க வுக்கும் வாக்களிப்பர்


Barakat Ali
நவ 17, 2025 08:54

தமிழக வாக்காளர்கள் சிந்தித்து வாக்களிப்பவர்கள் கிடையாது .... உணர்ச்சியின் அழுத்தத்தால் வாக்களிப்பவர்கள் .....


c.k.sundar rao
நவ 17, 2025 09:53

People of TASMAC NADU will vote for MONEY,BRIYANI AND QUARTER forgoing SELF RESPECT


vivek
நவ 17, 2025 11:53

உன் கிட்ட சொன்னார்களா கைலாசம்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை