உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / நிதிஷ் குமார் பாதையில் பீஹாரின் புதிய முதல்வர்!

நிதிஷ் குமார் பாதையில் பீஹாரின் புதிய முதல்வர்!

பீஹார் மாநிலத்தில், கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ஐக்கிய ஜனதா தளம் கட்சி தலைவர் நிதிஷ் குமார் தலைமையிலான, தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, 75 வயதான நிதிஷ் குமார், அம்மாநிலத்தின் முதல்வராக, 10வது முறையாக பதவியேற்றார். இந்நிலையில், முதல்வர் பதவியில் இருந்து விலகி, ராஜ்யசபா எம்.பி.,யாக நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளார். அதற்கான வேட்பு மனுவையும் சமீபத்தில் தாக்கல் செய்துள்ளார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=o84037zg&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0'அரசியல் வாழ்க்கையை துவங்கிய காலத்தில் இருந்தே, பார்லிமென்டின் இரு சபைகளிலும் உறுப்பினராக வேண்டும் என்பது என் ஆசை. ஏற்கனவே லோக்சபா எம்.பி.,யாக இருந்து விட்டதால், இம்முறை ராஜ்யசபா எம்.பி.,யாக விரும்புகிறேன்' எனவும், அவர் விளக்கம் அளித்துள்ளார். நிதிஷ் குமாரின் இந்த முடிவு, அரசியல் வட்டாரத்தில் சலசலப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி உள்ளது. 2005ல் பீஹார் முதல்வராக, நிதிஷ் குமார் முதல் முறையாக பதவியேற்றார். அப்போது முதல், மாநில அரசின் மையமாக இருந்து வந்தார். இவர் முதல்வராவதற்கு முன், 1990ம் ஆ ண்டுகளில், பீஹார் மாநிலம், ஜாதி அரசியலில் தீவிரமான எழுச்சி கண்டிருந்தது. ஒரு காலகட்டத்தில் நிதிஷின் நண்பராக இருந்தவரும், பின்னர் போட்டியாளராக மாறியவருமான ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமூக நீதி பற்றி பெரிய அளவில் பேசினாலும், அதை மாநிலத்தில் நிலை நாட்டுவதில் பெரிய அளவில் அக்கறை காட்டவில்லை. அவரது அரசியல் பயணம், சொந்த ஜாதி மற்றும் குடும்பத்திற்குள் சுருங்கியது. அந்த நிலையை மாற்றியவர் நிதிஷ் என்றால் மிகையில்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில், ஒரு சிறிய சமூகத்தை சேர்ந்தவரான நிதிஷ், தன் அரசியல் குருவான ஜெயப்பிரகாஷ் நாராயணன் கொள்கையை பின்பற்றி செயல்பட துவங்கினார். அரசியல் ரீதியாக உயர் ஜாதியினர், யாதவர்கள், இதர பிற்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினர், தலித்துக்கள் மற்றும் முஸ்லிம் பிரிவுகளை அரவணைத்து இயங்கினார். அத்துடன், பா.ஜ., உடன் அவர் அமைத்த கூட்டணி, அவரது அரசியல் ரீதியான வெற்றிக்கும் கைகொடுத்தது. மேலும், நிதிஷ் குமார் முதல் முறை முதல்வராக பதவியேற்ற போது, பீஹார் மாநிலம், பலமான நிர்வாக நெருக்கடியை சந்தித்து வந்தது. மாநிலத்தின் உள்கட்டமைப்புகள் பலவீனமாக இருந்தன. ஜாதிய வன்முறை, பணத்திற்காக கடத்தல் மற்றும் நில மாபியாக்களால், பீஹார் என்றாலே மோசமான மாநிலம் என்ற பிம்பம் உருவாகியிருந்தது. எனவே, மாநிலத்தின் பெருமையை மீட்டெடுப்பது நிதிஷுக்கு மிக அவசரமான முன்னுரிமையாக மாறியது. சட்டம் - ஒழுங்கு, நிர்வாக நடைமுறைகளை சீரமைத்தது, காவல் துறையின் செயல்பாடுகளை மேம்படுத்தியது போன்றவற்றுக்கு, அவரது அரசு கொடுத்த முக்கியத்துவம், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை சூழலை மாற்றியது. பொதுமக்கள் மத்தியில் பாதுகாப்பு உணர்வு மேம்பட்டது. மாநிலத்தில் பொருளாதார நடவடிக்கைகள் விரிவடைவதற்கான சாதகமான சூழல்களும் உருவாகின. மேலும், அரசு வேலைகளிலும், உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியது, சுய உதவிக்குழுக்கள் மேம்பட உதவியது, மதுவிலக்கை அமல்படுத்தியது உள்ளிட்ட பல நடவடிக்கைகளை எடுத்ததன் வாயிலாக, பெண் வாக்காளர்களின் மனதிலும் இடம் பிடித்து, வெற்றிகரமான முதல்வராக தொடர்ந்தார். அப்படிப்பட்டவர், தற்போது முதல்வர் பதவியில் இருந்து விலகுவதால், அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டணி கட்சியான பா.ஜ.,வை சேர்ந்தவரே முதல்வர் பதவிக்கு வரலாம் என்றும், நிதிஷ் குமாரின் பதவி விலகலுக்கான ஆறுதல் பரிசாக, அவரின் மகன் நிஷாந்த் குமாருக்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படலாம் என்றும், எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்து யார் ஆட்சி பொறுப்பை ஏற்றாலும், அவர்களின் அரசு, 20 ஆண்டுகளாக நிதிஷ் குமார் பராமரித்த அரசியல் சமநிலையையும், வளர்ச்சி வேகத்தையும் முன்னெடுத்து செல்ல வேண்டும். இதுவே, அம்மாநில மக்களின் எ திர்பார்ப்பு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Nathansamwi
மார் 09, 2026 10:25

தமிழகத்தில் வாரிசு அரசியல் என்று சொல்லும் பாஜக இதுக்கு என்ன பதில் வைத்துள்ளர்கள் ?


பிரேம்ஜி
மார் 09, 2026 07:54

அவனவன் ஆசையை மக்களை வைத்து நிறைவேற்றிக் கொள்கிறார்கள்! பேசும் போது மட்டுமே மக்கள் தேவையை நிறைவேற்ற பதவியை ஏற்பதாகச் சொல்லுவார்கள்! எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே?


N Sasikumar Yadhav
மார் 09, 2026 09:48

உங்க கோபாலபுர திராவிட எஜமானை நினைத்து இப்படியெல்லாம் புலம்பக்கூடாது


Kasimani Baskaran
மார் 09, 2026 03:59

நிதிஷ் குமாரை பொறுத்தமட்டில் படாடோபம் இல்லாத ஆட்சி என்றுதான் சொல்லவேண்டும்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை