உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / தலையங்கம் / எதிர்க்கட்சிகளை கலங்கடித்த அரசியல் சட்ட திருத்த மசோதா!

எதிர்க்கட்சிகளை கலங்கடித்த அரசியல் சட்ட திருத்த மசோதா!

அரசியல் சட்டத்தின், 130வது திருத்த மசோதா சமீபத்தில் பார்லிமென்டில் தாக்கல் செய்யப்பட்டு, பார்லிமென்ட் கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு உள்ளது. பிரதமர், முதல்வர், மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் என, அரசு நிர்வாக பதவியில் இருக்கும் எவரும், ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக தண்டனை பெறக்கூடிய குற்ற வழக்குகளில் கைதாகி, 30 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருந்தால், அவர்கள் பதவி வகிக்கும் தகுதியை இழப்பர் என்கிறது, இந்த சட்ட திருத்த மசோதா.அதாவது, பிரதமரின் ஆலோசனையின் பேரிலோ அல்லது நேரடியாகவோ அமைச்சர்கள் மற்றும் பிரதமரை, ஜனாதிபதி பதவிநீக்கம் செய்யலாம். மாநில அமைச்சர்களை முதல்வரின் ஆலோசனைப்படி கவர்னர் நீக்கலாம் அல்லது மாநில முதல்வரை கவர்னர் நேரடியாக பதவி நீக்கலாம் அல்லது அவர்களின் பதவி தானாகவே பறிபோகும் என்பது உட்பட பல விதிமுறைகள் மசோதாவில் இடம் பெற்றுள்ளன. அதனால், 'இம்மசோதா அரசியலில் நல்லாட்சி யையும், ஒழுக்கத்தையும் வலுப்படுத்த உதவும்' என்று, ஆளுங்கட்சி தரப்பில் கூறப்பட்டாலும், 'அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபட, இந்த மசோதா பெரிதும் உதவும்' என, எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. பொது வாழ்வில் இருப்பவர்கள் நேர்மையை கடைப்பிடிக்க வேண்டியது அவசியம் தான். அதே நேரத்தில், பழிவாங்கும் நடவடிக்கையாக ஒருவர் மீது பொய் புகார்கள் கூறப்படும் போது, அதுபற்றி தீர விசாரித்து உண்மையை கண்டறிய வேண்டும். அதற்கு பதிலாக, உரிய நடைமுறையை தவிர்த்து, அதிரடி நடவடிக்கைகளை மேற்கொள்வது சரியானதல்ல. அது மட்டுமின்றி, இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால், எதிர்க்கட்சிகள் மற்றும் அந்தக் கட்சிகளின் அமைச்சர்களை குறிவைக்க, மத்திய அரசின் கைகளில் கிடைத்த மற்றொரு ஆயுதமாகவே இருக்கும். சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை உள்ளிட்ட மத்திய புலனாய்வு அமைப்புகள், எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை வேட்டையாட பயன்படுத்தப்படும் என்றும் புகார் கூறப்படுகிறது. தற்போதுள்ள சட்டங்களும், அதை அமல்படுத்த பின்பற்றப்படும் நடைமுறைகளும், பொது வாழ்வில் உள்ளவர்களை குறிப்பாக, மத்திய, மாநில அரசுகளில் உயர் பொறுப்பு வகிக்கும் அரசியல்வாதிகளை பாதுகாப்பதாக உள்ளது. ஆனால், மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள அரசியல் சட்ட திருத்த மசோதா, அனைத்து விதமான பாதுகாப்புகளையும் நீக்கி, அரசியல் ரீதியாக யாரையும் பழிவாங்கும் நோக்கத்துடன் தடுப்புக் காவலுக்கு ஆளாக்க முடியும் என்பதும், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டு. தற்போதைய மத்திய பா.ஜ., ஆட்சியில் மட்டுமின்றி, முந்தைய காங்கிரஸ் ஆட்சி காலத்திலும், சி.பி.ஐ., மற்றும் அமலாக்கத்துறை மீது குற்றச்சாட்டுகள் கூறப்பட்டது உண்டு. இந்த இரண்டு அமைப்புகளும், மத்திய அரசின் கைப்பாவையா க செயல்படுகின்றன. குறிப்பாக எதிர்க்கட்சி தலைவர்களை பழிவாங்க பயன்படுத்தப்படுகின்றன என்று, தொடர்ந்து புகார் கூறப்படுகிறது. அதற்கேற்ற வகையில், சமீப நாட்களில், உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்திற்கும், கடும் விமர்சனத்திற்கும் அமலாக்கத்துறை ஆளாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளை கலைக்க, முந்தைய காங்கிரஸ் அரசு, அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை பலமுறை பயன்படுத்தியதையும் யாரும் மறுக்க முடியாது. அதுபோன்ற நிலைமையை மத்திய அரசின் புதிய சட்ட திருத்தம் உருவாக்கி விடும் என்பதே பலரின் அச்சம். ஆனாலும், பொதுவாழ்வில் நேர்மையை பேணிக்காக்க வேண்டியது அவசியம். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பொதுமக்கள் நலனில் அக்கறை காட்டுவதையும் உறுதிசெய்ய வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் தான், இந்த அரசியல் சட்ட திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனவே, தற்போதைய மசோதாவில், தேவையெனில் முறையான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும். அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையாக, நிரபராதிகள் யாரும் தண்டிக்கப்பட்டு விடக்கூடாது என்பதையும் உறுதிசெய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 41 )

ManiMurugan Murugan
செப் 01, 2025 23:48

ManiMurugan Murugan எதிர் ஆக கட்சிகள் அவர்கள் மீது தப்பு இருப்பதால் பயப்படுகிறார்கள் ஒரு அமைச்சர் அதிகாரி அரசு துறை எதன் மீது வழக்கு என்றாலும் குறைந்தது ஒரு வருடம் ஆகிறது விசாரிக்கவே பிறகு எதற்கு இவ்வளவு எதிர்ப்புகள் வருமான த் துறை அமைக்க த் துறை புலனாய்வு நடவடிக்கை தடை யில்லாமல் நடக்கிறதா அப்படியே நடந்தாலும் நீதிமன்றம் தடை ப் போடுகிறது எதிர்க்கட்சிகள் என்றப் பெயரில் இருக்கும் பொழுதுபோக்குபவர்கள் ஆக்கப்பூர்வமாக செயல்படுவது விட்டு கூச்சல் போட வருகிறார்கள்


Sridhar
செப் 01, 2025 16:27

இது ஒன்னும் பெரிய மேட்டரே இல்ல. கெஜ்ரிவால் செந்தில் பாலாஜி தவிர மற்ற எல்லோரும் கைது ஆனா ஒடனே ராஜினாமா செஞ்சுக்கிட்டுதான் இருக்காங்க. ஹேமந்த் சோரன் கூட கைதாகும்போது ராஜினாமா செஞ்சிட்டு அப்புறம் மீண்டும் பதவி ஏத்துக்கிட்டாரு. ஜெயலலிதா கூட கைதானவுடனே ராஜினாமா செஞ்சாங்க. திருட்டு கும்பல் என்ன செய்யுதுன்னு பார்ப்போம்


ஆரூர் ரங்
செப் 01, 2025 15:55

சிறையிலிருந்துகொண்டே பதவி வகிக்கலாம் என்று( லாலுவுக்காக) மன்மோகன் சட்ட முன்வரை கொண்டுவர முயன்ற போது ராகுல் அதனை நான்சென்ஸ் எனக் கூறி கிழித்தெறிந்தார். இப்போ கொண்டு வந்துள்ள சட்டத்தை அவரே எதிர்க்கிறார் . முரண்பாட்டின் உச்சம்


Sridhar
செப் 01, 2025 18:59

அந்த சட்டம் வேற. அதுல குற்றவாளின்னு தீர்ப்பு வந்து 4 வருசத்துக்கு மேல தண்டனை கிடைச்சா 6 வருசம் தேர்தல்ல நிக்கமுடியாது. நம்ம சசிகலாவுக்கு நடந்தது மாதிரி.


சத்யநாராயணன்
செப் 01, 2025 15:42

இதைப் போன்ற கடுமையான சட்டங்கள் நாட்டில் மிக மிக அவசியம் இப்பொழுது இருக்கும் அரசியல்வாதிகளின் நேர்மையை கவனத்தில் கொள்ளும் போது இத்தகைய சட்டம் இப்பொழுது மிக மிக அவசியம் மிக மிக கண்ணியமான நேர்மையான தலைவர்களின் மீது பொய் புகார் கூறப்பட்டாலும் அவர்கள் அதே கண்ணியமாகவே எதிர்கொள்வார்கள் எப்பொழுதும் பதவிக்காக அவர்கள் கண்ணியத்தை விட்டுக் கொடுக்க மாட்டார்கள் அத்தகைய நேர்மையானவர்கள் மட்டுமே இந்தியாவை ஆள வேண்டும் சுயலாபத்திற்காகவும் லாப நோக்கத்திற்காகவும் பதவிக்கு வருபவர்கள் இனி நாட்டுக்கு தேவை இல்லை அரசியல் பணி என்பது வேலை வாய்ப்பு அல்ல அது மிகத் தூய்மையான சேவைப் பணி


சிந்தனை
செப் 01, 2025 14:20

அரசியல்வாதிகள் ஆட்சியாளர்கள் கொள்ளையடித்தால் அவர்களை பதவி நீக்கம் செய்தல் பத்தாது உடனடியாக தூக்கு தண்டனையில் போட வேண்டும் அப்பொழுதுதான் நாடு நன்றாக இருக்கும்


shyamnats
செப் 01, 2025 18:46

குறைந்த பட்சம் அவர்கள் ஊழல் செய்து சேர்த்த சொத்துக்களை மொத்தமாக பிடுங்க வேண்டும். வழக்குகளை நீண்ட வருடங்களுக்கு நீட்டி இழுக்க கூடாது.


Venugopal S
செப் 01, 2025 12:50

இந்த சட்டத் திருத்த மசோதா எதிர்க்கட்சியினரை கலங்கடிக்கவில்லை. அதை துஷ்பிரயோகம் செய்து எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆட்சியைக் கவிழ்க்க பாஜக குள்ளநரித்தனம் செய்யும் என்பது தான் பிரச்சனையே!


vivek
செப் 01, 2025 13:11

உடனே ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் திமுக போராட்டம் நடத்தும் என்று கூறினார்


shyamnats
செப் 02, 2025 07:51

இதுவரை எத்தனை முறை சட்ட சபைகளை கலைத்திருக்கிறது, பா ஜ க ? கான் கிராஸ் ஆட்சியிலிருக்கும் போது செய்ததைவிடவா, செய்திருக்கிறது? ஊழல் வாதிகளுக்கு பயம், எதிர்க்கிறார்கள் மேலும் இது, ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகள் அனைவருக்கும்தானே


Abdul Rahim
செப் 01, 2025 12:08

30 நாட்கள் சிறையில் இருக்கும் ஒருவர் அதன் பின்பு இந்த சட்டத்தால் பதவி இழந்தால் ஒரு வேலை 32 வது நாள் அவர் மீதான குற்றம் பொய் என்பது நிரூபணம் ஆனால் ???????????


Shankar
செப் 01, 2025 12:40

நம் நாட்டில் எத்தனையோ வழக்குகளில் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டவர்கள் கடைசியில் நிரபராதி என்று நீதிமன்றம் விடுவிப்பதில்லையா. அதேபோலத்தான் இதுவும். மடியில் கணம் இருந்தால்தானே வழியில் பயப்பட வேண்டியிருக்கும்.


Kjp
செப் 01, 2025 14:38

மீண்டும் பதவியைப் பெற்றுக் கொள்ளலாம். ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருந்து பிறகு ஜாமீனில் வந்து வந்த மறுநாளே மந்திரி பதவியை ஏற்றுக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். வீன் கவலைகள் வேண்டாம்.


ஆரூர் ரங்
செப் 01, 2025 15:51

ஒரே ஒரு மாதம் அரசியல் பதவியிலில்லாமல் இருப்பது ஒரு தண்டனையா? ஒருமுறை கருணாநிதி 13 ஆண்டு ( பதவியில்லாத) தண்டனை போதும் என மக்களிடம் மன்றாடினார். நாற்காலி ஆசை? வெறி?


Abdul Rahim
செப் 01, 2025 12:07

எதிர்க்கட்சிகள் சற்று பொறுமையாக இருங்கள் பாஜக வின் இந்த சர்வாதிகார சட்டம் பாஜகவிற்க்கே ஆப்பு வைக்கும் மத்தியில் ஆட்சி மாறும்போது எதிரிக்கட்சிகளின் கவலை மற்றும் ஆதங்க குரல் பாஜகவின் குரலாக மாறி வெளிப்படும் எனவே சற்று பொறுங்கள் ஆப்பசைத்த குரங்காக பாஜக மாறும்...


Arya Prasad
செப் 01, 2025 14:51

கனவு கான எல்லோருக்கும் உரிமை உண்டு


shyamnats
செப் 01, 2025 16:06

மூட்டையில் கட்டி வைத்த நெல்லிக்காய் பிரிந்தவுடன் சிதறுவது போல , இண்டி கூட்டணி. அதில் வொவ் வொருவரும் பிரதமர் கனவில் மிதந்தால் பொது மக்கள் பொறுப்பல்ல.


raja
செப் 01, 2025 11:53

கைய் சுத்தம் மன சுத்தம் உள்ளவன் எதற்கும் பயப்பட தேவை இல்லை ... திருட்டு திராவிட கான் க்ராஸ் கூட்டணியில் உள்ள கொள்ளையர்கள் மட்டுமே பயப்படுவானுவோ....


Abdul Rahim
செப் 01, 2025 12:44

துவாரகா நெடுஞசாலை ஊழல் ,rafeal ஊழல் எல்லாம் அடுத்த ஆட்சியில் வெளிவரும்


ராஜ்
செப் 01, 2025 11:28

கானகிராஸ் தன் பேச்சை கேட்காத எத்தனை அரசை 356யை பயன் படுத்தி கலைத்து உள்ளது ஆனால் பிஜேபி இந்த மாதிரி நல்ல சட்டங்கள் கொண்டு வருகிறது