மேலும் செய்திகள்
தரன் தரும் தரமான இலக்கியம்
20-Jul-2025
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சார்பில், 263வது இலக்கியச் சந்திப்பு கூட்டம், தாமஸ் கிளப் அரங்கில் நடந்தது. -கவிஞர் வெங்கடேசன் தலைமை வகித்தார். கவிஞர் இசையின் கவிதை நுால் குறித்து, எழுத்தாளர் ஸ்டாலின் சரவணன் பேசுகையில், ''கவிஞர் இசையின் கவிதைகளில், மனிதர்களின் உள் மன உணர்வுகள் பிரதிபலிக்கின்றன. நாம் கவனிக்கத் தவறிய பல விஷயங்களை, அவருக்கே உரிய பாணியில் கவிதைகள் எழுதி இருக்கிறார். இவரது கவிதைகளை படித்து முடித்தவுடன், ஒரு நகைச்சுவை உணர்வு ஏற்படும். அந்த கவிதையை ஆழ்ந்து யோசித்து பார்த்தால், அதில் சமூகம் குறித்த விமர்சனம் இருக்கும். இசையின் கவிதைகளை வாசிக்க தனித்துவமான மனமும், மகிழ்ச்சியான மனநிலையும் வேண்டும்,'' என்றார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்க மாவட்ட செயலாளர் கரீம், சங்க நிர்வாகிகள் மணி, முத்தையா மோகன், இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
20-Jul-2025