உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / சமூக மாற்றத்துக்கான சிறிய நம்பிக்கைதான் என் கவிதை

சமூக மாற்றத்துக்கான சிறிய நம்பிக்கைதான் என் கவிதை

''ஆ காயம், மலைகள், நதிகள் மற்றும் இயற்கையை பற்றி நான் கவிதைகள் எழுதுவது இல்லை. மனிதர்கள் பற்றியும், அவர்களின் உணர்வுகளை பற்றியும்தான் எழுதுகிறேன்,'' என்கிறார் கவிஞர் கிருஷ்ணகோபால். கோவையை சேர்ந்தவர் தொழில் முனைவோர் கிருஷ்ணகோபால். விளம்பரத்துறையில் 40 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். ஆங்கில இலக்கியத்தில் முதுகலை பட்டம் பெற்ற இவர், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதி வருகிறார். 'இரண்டாவது மனிதன் வீடு', 'பட்டுப்பூச்சிகளுக்கும் பறவைகளுக்கும் விலாசம் இல்லை' என்ற இரண்டு கவிதை நுால்களை எழுதி இருக்கிறார். ஆங்கில கவிதை நுால் விரைவில் வர உள்ளது.சமூகம், கலை இலக்கியம் மற்றும் பண்பாட்டு சார்ந்து விழிப்புணர்வு உள்ள கவிதைகளை எழுதி வரும் கிருஷ்ணகோபாலிடம் பேசிய போது, தனது இலக்கிய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார், '' அன்றாடம் மக்கள் சந்திக்கும் பிரச்னைகளைதான், நான் கவிதைகளாக எழுதுகிறேன். ஆகாயம், மலைகள், நதிகள் மற்றும் இயற்கையை பற்றி எழுதுவது இல்லை. ஆங்கில இலக்கியம் படித்து இருந்தாலும், நான் பள்ளியில் படித்த தமிழைத்தான் அதிகம் விரும்புகிறேன்.இயற்கையின் அழகை பற்றியோ, கனவு உலகைப் பற்றியோ எழுதுவதால் பலனில்லை. இயற்கையை மறந்தவர்களை பற்றியும், இயற்கைக்கு எதிரானவர்களையும் எழுதுகிறேன். அவர்களிடம் இந்த கவிதைகள் சிறிய மாற்றத்தை ஏற்படுத்தினால் கூட போதும். சமூக மாற்றத்துக்கான சிறிய நம்பிக்கைதான் என் கவிதை,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை