உள்ளூர் செய்திகள்

/ வாராவாரம் / விருந்தினர் பகுதி / கலைகள் அழிந்தால் மீட்க முடியாது: பத்மஸ்ரீ பத்திரப்பன்

கலைகள் அழிந்தால் மீட்க முடியாது: பத்மஸ்ரீ பத்திரப்பன்

'மக்களிடம் கடவுள் பக்தி கிராமிய நிகழ்ச்சிகள் வழியாகதான் வந்தது. படிப்பறிவு இல்லாத காலத்தில் வாழ்ந்த மக்கள், தெய்வ பக்தியில் சிறந்து விளக்க காரணம் இந்த கலைகள்தான்'' என்கிறார் பத்மஸ்ரீ விருது பெற்ற கிராமிய கலைஞர் பத்திரப்பன்.கோவையை சேர்ந்த பத்திரப்பன், 88 வயதை கடந்தவர். கிராமிய கலைகளை வளர்க்க வேண்டும் என, 60 ஆண்டுகளுக்கும் மேலாக வள்ளிக்கும்மி உள்ளிட்ட பல கிராமிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார். பல இளைஞர்களுக்கு இந்த கலையை கற்றுக்கொடுக்கும் ஆசானாகவும் இருக்கிறார். கலைமாமணி, பத்மஸ்ரீ உள்ளிட்ட பல விருதுகளை பெற்றுள்ள இவர் அளித்த பேட்டி.தமிழர் பண்பாட்டின் அடையாளமாக இருப்பவை கிராமிய கலைகள். அந்த காலத்தில் ஆண்கள் மட்டும்தான் ஆடிப்பாடி, நடித்து வந்தனர்.நாடகம், கூத்து நிகழ்த்து கலைகளில் கூட ஆண்கள் தான் பெண் வேடமிட்டு நடித்தனர். கிராமிய கலைகளில் பெண்கள் விரும்பினாலும் நடிக்க அனுமதி இல்லை.கிராமத்தில் பண்டிகை காலங்களிலும், ஊர் திருவிழா நாட்களிலும்தான் இந்த நிகழ்ச்சிகள் நடக்கும். விடிய விடிய துாங்காமல் மக்கள் உட்கார்ந்து கூத்து பார்ப்பார்கள்.ராமாயணம், மகாபாரதம், அரிச்சந்திரன், காத்தவராயன் கதைகள் எல்லாம் புத்தகத்தில் படித்து பலர் தெரிந்து கொள்ளவில்லை. கூத்து, வள்ளிக்கும்மி, உடுக்கை பாடல் போன்ற கிராமிய கலை நிகழ்ச்சிகள் வழியாக தெரிந்து கொண்டவர்கள் உண்டு.மக்களுக்கு கடவுள் பக்தி வளரவும் கிராமிய கலைநிகழ்ச்சி காரணமாக இருந்தது. வள்ளிக்கும்மியில் வள்ளி பிறப்பில் இருந்து முருகன் வள்ளியை திருமணம் முடிக்கும் வரை, 33 பாடல்களும், 28 வகையான ஆட்டமும் இருக்கிறது. பாடலுக்கு ஏற்ப ஆட்டம் மாறும். இசையும் வேறுபாடும்.முன்பெல்லாம் மக்கள் விடிய விடிய உட்கார்ந்து பார்ப்பார்கள். இன்றைக்கு இந்த நிகழ்ச்சிகளை 30 நிமிடம் கூட பார்க்க மாட்டார்கள். சினிமா வளர்ந்த போது நாட்டுப்புறக்கலைகள், கிராமிய கலைகள் பாதி அழிந்து போனது. இப்போது அலைபேசி வந்த பிறகு முழுவதும் அழிந்து போகும் நிலை உள்ளது.இதை மீட்டெடுக்கவில்லை என்றால் நமது பண்பாடு காணாமல் போய்விடும். கிராமிய கலை நிகழ்ச்சிகளை அதிகம் நடத்த வேண்டும். அந்த கலைஞர்களை ஊக்கப்படுத்த வேண்டும். காசு பணம் போனால் சம்பாதித்து விடலாம்; கலைகள் அழிந்து போனால் மீட்க முடியாது என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ