எகிப்தில் இந்திய சுதந்திர தின விழா
கெய்ரோ: எகிப்து நாட்டின் தலைநகர் கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 79வது சுதந்திர தினம் மிகவும் உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது. முன்னதாக எகிப்து நாட்டைச் சேர்ந்த 40 மாணவர்கள் இந்திய தேசிய கீதத்தைப் பாடினர். இந்திய தூதர் எஸ்.கே. ரெட்டி இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் இந்திய குடியரசுத் தலைவரின் சுதந்திர தின உரையை வாசித்தார். இந்திய தூதரகத்தில் 25 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் எகிப்து நாட்டைச் சேர்ந்தவர்கள் நினைவுப் பரிசு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடந்தது. இந்திய தூதரக அதிகாரிகள், எகிப்து நாட்டில் உள்ள அல் அஸார் பல்கலைக்கழகம், அய்ன் சம்ஸ் பல்கலைக்கழகம் மற்றும் கெய்ரோ பல்கலைக்கழகத்தில் படித்தும் வரும் இந்திய மாணவர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா