உள்ளூர் செய்திகள்

நைஜீரியாவில் மார்கழி, தை திருநாள் வழிபாடு

லேகோஸ், நைஜீரியா: மார்கழி மாதம் லிங்கேஸ்வருக்கு திருவெம்பாவை பாடி தினமும் காலை 6 மணிக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. நேற்று ஆருத்ரா தரிசனமும் நிகழ்ந்தது. ஸ்ரீகுரோதி ஆண்டின் பொங்கல் பண்டிகை விமரிசையாக நடைபெற்றது. வண்ணமிகு கரும்பு - பானை கோலத்திற்கு மத்தியில் கரும்பு மண்டபம் அமைத்து மாவிலை தோரணம் கட்டி அதில் பொங்கல் வைத்து ஆதவனை வழிபட்டு, பொங்கல் பானையில் 'பொங்கலோ பொங்கல்' என்று கூறி சக்கரைப்பொங்கல் செய்து இறைவனுக்கு படைக்கப்பட்டது. அதை பிரசாதமாகவும் வழங்கப்பட்டது. சரியாக 11 30 மணிக்கு மஹா தீபாராதனை நடைபெற்றது. முருகன் அலங்காரமும் அமர்க்களமாக அமைந்திருந்தது. - நமது செய்தியாளர் ஸ்ரீவித்யா ஆனந்தன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !