கானா நாட்டில் தமிழர் திருவிழா
மேற்கு ஆப்ரிக்க நாடான - கானா நாட்டில் தமிழர் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கானா தமிழ்ச்சங்கத்தின் சார்பில் தலைவர் மோகன், உபதலைவர் சதீஷ், செயலாளர் ஆனந்த் மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் முன்னேற்பாட்டில் தமிழ் புத்தாண்டை கொண்டாடும் விதமாக தமிழர் திருவிழா மிக விமரிசையாக நடைபெற்றது, இதில் கிட்ட தட்ட 400 நபர்களுக்கு மேல் தமிழர்கள் மற்றும் பிற இந்திய மாநிலத்தை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டார்கள், இதில் காலை 10:30 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சிகள் தொடங்கியது. நமது கலாச்சாரத்துடன் கூடிய கலை நிகழ்ச்சிகள் மற்றும் விளையாட்டுப் போட்டிகளாக கயிறு இழுத்தல், உறியடித்தல், சிறுவர்களுக்கான கால்பந்து போட்டி, இசை நாற்காலி, மற்றும் இன்னும் பல போட்டிகள் நடைபெற்றது இதில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு சிறப்பித்தார்கள் அனைவரும் பார்த்து மகிழ்ந்தனர், அத்துடன் கைவினைப் பொருட்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது மற்றும் உணவு, குளிர்பானங்கள் விநியோகம் செய்யப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக கானா நாட்டிற்கான இந்திய தூதர் மணீஷ் குப்தா மற்றும் அவரது மனைவி கலந்து கொண்டு சிறப்பித்தனர். அத்துடன் பிற சங்கங்களின் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களும், கானாவில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் பிற மொழி மக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள், இந்த தமிழர் திருவிழா மிக இனிமையாகவும், விமரிசையாகவும் நடந்து முடிந்தது. - தினமர் வாசகர் ஞானபண்டிதன், கானா தமிழ்ச்சங்க உறுப்பினர்