சாம்பியாவில் தமிழ் சங்க விளையாட்டு விழா
ஜூன் மாதத்தில் சாம்பியா தமிழ் கலை மற்றும் கலாச்சார மன்றத்தின் சார்பாக விளையாட்டு விழா லோட்டஸ் மைதானத்தில் நடைபெற்றது. சிறுவர்கள் முதல் பெரியோர் வரை பங்கு பெரும் வகையில் விளையாட்டு போட்டிகளை நிர்வாக குழுவினர் நடத்தினர் கோகோ, கபடி, ஓட்ட பந்தயம் , கிரிக்கெட், பாட்மிண்டன், ஸ்கிப்பிங், பந்து ஏறிதல் , பலூன் ஊதுதல், சாக்கு ஓட்டம், மிதி வண்டி ஓட்டுதல், தண்ணீர் நிறைத்தல், வினா விடை போன்ற விளையாட்டுகள் நடத்தப்பட்டன. இருநூறுக்கும் அதிகமான தமிழர்கள் போட்டியில் கலந்து கொண்டனர், நான்கு குழுவாக விளையாடி (கோவை சிங்கம், சென்னை சிறுத்தை , மதுரை காளை, தஞ்சை புலி ) அதில் கோவை சிங்கம் அணியினர் அதிக புள்ளியுடன் கோப்பையை தட்டி சென்றனர். நாராயணி தலைமையில் நிர்வாக குழுவினர் பங்கேற்ற அனைத்து போட்டியாளருக்கும் நினைவு பரிசுகள் வழங்கினார் - நமது செய்தியாளர் நவ்ஃபல் ஃபக்ருதீன்