பாங்காக்கில் மஸ்னவி ஷரீஃப் நூல் வெளியீட்டு விழா
பாங்காக் : பாங்காக்கில் தாய்லாந்து தமிழ் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் பாங்காக் பள்ளிவாசலில் மஸ்னவி ஷரீஃப் நூல் வெளியிட்டு விழா 'மா நபியும் மஸ்னவியும்' - இது ஓர் இலக்கிய ஆன்மீக சங்கமம் எனும் தலைப்பில் நடந்தது. விழாவில் துபாயில் இருந்து முஹிப்புல் உலமா ஏ. முஹம்மது மஃரூப், சென்னை அல் இஸ்ரார் மெய்ஞான மாத இதழ் ஆசிரியர் மௌலவி டி.எஸ்.ஏ. அபூதாஹிர் ஃபஹீமி ஆகியோர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தினர். மேலும் மஸ்னவி ஷரீஃப் நூல் வெளியிடப்பட்டது. விழாவில் தாய்லாந்து தமிழ் முஸ்லிம் அசோஷியேசன் நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். - துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா