தாய்லாந்து ஸ்ரீமகா மாரியம்மன் ஆலயத்தில் ஆங்கிலப் புத்தாண்டு பூஜைகள்
தாய்லாந்து ஸ்ரீமகா சக்தி மாரியம்மன் ஆலயத்தில் ஒவ்வொரு வருடமும், முதல் நாளான ஆங்கிலப் புத்தாண்டில், விநாயகர், மஹா லெட்சுமி மற்றும் ஸ்ரீமகா மாரியம்மன் சிறப்பு பூஜைகளுடன், தொடர்ந்து ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, தைப்பொங்கல், தைப்பூசம், மாசி மகம், மகா சிவராத்திரி, பங்குனி உத்திரம், தமிழ் புத்தாண்டு, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம், வரலட்சுமி பூஜை, கந்தர் சஷ்டி 6 நாட்கள், கோகுலாஷ்டமி, விநாயகர் சதுர்த்தி, ஹனுமன் ஜெயந்தி, அனைத்து புரட்டாசி சனிக்கிழமைகள், தீபாவளி, கார்த்திகை தீபம், நவராத்திரி 9 நாட்கள் மற்றும் ஒவ்வொரு மாதமும் வரும் பௌர்ணமி , சங்கடஹர சதுர்த்தி என சுமார் 120 நாட்கள் ஆகம விதிகளுடன், அனைத்து பூஜைகள் , ஹோமங்கள், வேதங்கள் இசைக்க, சுவாமி புறப் பாட்டுடன் சிறப்பாக நடைபெற வேண்டி, முதல் நாள் புத்தாண்டு பூஜைகள் சிறப்பாக நடைபெற்றது. இவ்வாறாக, வருடத்தில் பெரும்பாலானநாட்கள் நடைபெறும் விழாக்கள் மூலம், மந்திரங்களின் ஜெபத்தால், அதிர்வலைகள் உருவாவதின் மூலம், கோவிலில் ஆக்கப்பூர்வமான சக்திகள் அனைத்து பகுதிகளிலிலும் நிரம்பி வழிந்து, வருகை தரும் பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் ஸ்தலமாக இருப்பதால், பல லட்சம் பக்தர்கள் வருகை தரும், ஆசியாவிலேயே சக்தி வாய்ந்த ஆலயங்களில் ஒன்றாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. - நமது செய்தியாளர் சரவணன் அழகப்பன்