உள்ளூர் செய்திகள்

குறள் இளவல் ஆதவன் செந்தில்குமார்: ஒரு தமிழ் பயணம்

அமெரிக்காவின் டெக்சாஸில் வசிக்கும் 8 வயது சிறுவன் ஆதவன் செந்தில்குமார், அமெரிக்காவில் 1330 திருக்குறள்களையும் ஒப்புவித்த மிக இளைய சிறுவர் ஆவார். தமிழ் மொழியின் மீது மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், தனது சிறு வயது முதலே பல்வேறு சாதனைகளைப் புரிந்து வருகிறார். திருக்குறள் சாதனைகள்: ஆதவன் தனது 5-வது வயதில், தமிழகத்தைச் சேர்ந்த ஆசிரியர் திரு. தமிழ் மகிழ்நன் ஐயா, இறை திருக்குறள் பயிற்றகம் மூலம் தனது திருக்குறள் பயணத்தைத் தொடங்கினார். ● 5 வயதில்: 240 திருக்குறள்களை ஒப்புவித்தார். ● 6 வயதில்: 500 திருக்குறள்களை ஒப்புவித்தார். ● 7 வயதில்: 1000 திருக்குறள்களை ஒப்புவித்தார். ● 8 வயதில்: 1330 திருக்குறள்களையும் ஒப்புவித்து முடித்தார். இவரது சாதனைகள் மார்ச் 17, 2026 அன்று தினமாலை செய்தி சேனலால் அங்கீகரிக்கப்பட்டது. திருக்குறளை ஒப்புவிப்பது மட்டுமல்லாமல், அதில் உள்ள சொற்கள், எழுத்துக்களின் புள்ளிவிவரங்கள் மற்றும் இலக்கணக் குறிப்புகளை நடுவர்களிடம் பகிர்ந்து அனைவரையும் வியக்க வைத்தார்.காலவரிசை மற்றும் வெற்றிகள்: ● 2022: o 'குறள் தேனி' பயணம் ஆரம்பம். o நியூயார்க்கில் நடைபெற்ற ஃபெட்னா (FETNA-2022) 'குறள் தேனி' இறுதிப் போட்டிக்குத் தேர்வானார். o அமெரிக்க தமிழ் அகாடமி, நார்த் கரோலினா நடத்திய மாறுவேடப் போட்டியில் முதலிடம். ● 2023: o கலிபோர்னியா, சாக்ரமென்டோ, ஃபெட்னா (FETNA-2023) “தமிழ் தேனி”, தேசிய அளவிலான போட்டியில் இரண்டாம் இடம் (தமிழ்த் திரைப்பட இசையமைப்பாளர் திரு. ஜேம்ஸ் வசந்தன், திரு. லிடியன் நாதஸ்வரம் மற்றும் செல்வி அமிர்தவர்ஷினி வழங்கிய கோப்பை). o டல்லாஸின் மெட்ரோபிளக்ஸ் தமிழ் சங்கம் நடத்திய தமிழ் பேச்சுப் போட்டியில், “கர்மவீரர் காமராஜர்” குறித்துப் பேசி இரண்டாம் இடம். o சாஸ்தா தமிழ் அறக்கட்டளை திருக்குறள் போட்டியில் முதலிடம். o அமெரிக்க தமிழ் அகாடமி, நார்த் கரோலினா நடத்திய மாறுவேடப் போட்டியில் முதலிடம்.● 2024: o சான் அன்டோனியோ ஃபெட்னா (FETNA-2024) 'குறள் தேனி' தேசிய அளவிலான போட்டியில் முதலிடம் (சர்வதேச தமிழ் ஆய்வியல் நிறுவன தலைவர் திரு. ஆர். பாலகிருஷ்ணன், இ.ஆ.ப (IAS) வழங்கிய கோப்பை.o அமெரிக்க தமிழ் அகாடமி, நார்த் கரோலினா நடத்திய செய்யுள் போட்டியில் வெற்றி. o சான் அன்டோனியோ, டெக்சாஸ், ஃபெட்னா (FETNA-2024), தேசிய அளவிலான தமிழ் பக்திப் பாடல் போட்டியில் இரண்டாம் பரிசு. திரு அருணகிரிநாதர் அருளிய திருப்புகழ் பாடல் “முத்தைத்தரு பத்தித் திருநகை” பாடல் பாடினார்.● 2025: o சர்வதேச தாய்மொழி தினத்தன்று மெட்ரோபிளக்ஸ் தமிழ் சங்கம் நடத்திய மாறுவேடப் போட்டியில், முதலிடம் ("புரட்சிக் கவிஞர் பாரதிதாசன்" வேடம்). o அமெரிக்க தமிழ் அகாடமி, நார்த் கரோலினா நடத்திய செய்யுள் போட்டியில் வெற்றி. ● 2026: o சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் திருக்குறள் போட்டியில், கடந்த நான்கு ஆண்டுகளாகத் தொடர்ந்து முதலிடம் பெற்றுள்ளார்.o சாஸ்தா தமிழ் அறக்கட்டளை நிறுவனர் திரு. வேலு ராமன் மற்றும் திருமதி. விசாலாக்ஷி வேலு அவர்களால் "குறள் இளவல்" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.o கோப்பல் தமிழ் கற்றல் மையத்தின் முதல்வர் முத்துக்குமார் ராமலிங்கம் மற்றும் செல்வி முத்துக்குமாரால் பள்ளி ஆண்டு விழாவில் பாராட்டு.o அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள ஹூஸ்டன் நகரைத் தலைமையமாகக் கொண்டு செயல்படும் “குறள் கூடல் செம்மொழி அறக்கட்டளை” ஆதவன் செந்தில்குமார்க்கு "வள்ளுவ செல்வன்" விருது வழங்கி உள்ளது.o தமிழ்நாடு அரசு சுற்றுலாத் துறை இயக்குநர் டாக்டர் வி.பி. ஜெயசீலன், நேரில் அழைத்து வாழ்த்தி, புத்தகங்களை பரிசாக கொடுத்து உற்சாகப்படுத்தினார்.o டல்லாஸின் மெட்ரோபிளக்ஸ் தமிழ் சங்கம் நடத்திய “சித்திரை திருவிழா” நிகழ்ச்சியில் திரு. லிடியன் நாதஸ்வரம் அவர்களின் “குரல் இசை காவியம்” இசை வெளியீட்டு விழாவிற்கு, “குறள் இளவல்” ஆதவன் செந்தில்குமார் விருந்தினராக அலைக்கபட்டார்.o இதர திறமைகள் மற்றும் நினைவாற்றல்: ● மலர்கள்: பண்டைய தமிழ் புலவர் கபிலரின் குறிஞ்சிப் பாட்டில் வரும் 99 தமிழ் மலர்களின் பெயர்களை 74 வினாடிகளில் ஒப்புவித்துள்ளார். ● ராகங்கள்: 72 மேளகர்த்தா ராகங்களின் பெயர்களை 72 வினாடிகளில் ஒப்புவித்துள்ளார். ● தமிழ் உரை: காமராஜர், வீரபாண்டிய கட்டபொம்மன், சொல்லில் உயர்வு தமிழ் சொல்லே, செல்வத்தில் சிறந்த செல்வம் எது.!, திருக்குறள் சிறப்புகள், 20 நூற்றாண்டு தமிழ் இலக்கிய வரலாறு, தமிழ் மொழியின் சிறப்புகள், போன்ற பல்வேறு தலைப்புகளில் உரையாற்றியுள்ளார். எதிர்கால இலக்கு: ஆதவன் செந்தில்குமார், திருவள்ளுவர் ஐயாவின் அடிச்சுவடுகளைப் பின்பற்றிச் சிறந்த வாழ்க்கை வாழவும், திருக்குறள் அறிவைத் தமிழ் சமூகத்திற்குப் பகிரவும் பயிற்சி மேற்கொள்கிறார். அடுத்த ஆண்டு 'குறள் இளவரசன்' பட்டத்தை அடைய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்.:ஆதவனின் தமிழ் உச்சரிப்பிற்காக ஆசிரியர்கள் பலரும் அவரைப் பாராட்டியுள்ளனர். அவரை வழிநடத்தி, இந்த நிலைக்கு வர ஆதரவளித்த அனைத்து ஆசிரியர்களும், குறிப்பாக ஆதவனின் திருக்குறள் ஆசான் தமிழ் மகிழ்நன், கோப்பல் தமிழ் கற்றல் மையத்தின் ஆசிரியர் செந்தில் துரைசாமி பாராட்டிற்குரியவர்கள்.- நமது செய்தியாளர் ஷீலா ரமணன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்