பிரான்ஸில் மகா சிவராத்திரி பூஜை
பிரான்ஸ் கிரிஞி சனாதான தர்ம பக்த சபையின் சார்பாக மகா சிவராத்திரி சிறப்பு பூஜை 08.03.2024 வெள்ளிக்கிழமைமாலை3 மணியிலிருந்து மறுநாள் காலை 6 மணி வரை சுவாமிக்கு அபிஷேக ஆராதனை உடன் பஜனைக் குழுவினரின் சிவபுராணம், திருவெம்பாவை பாடல்களுடன் நடைபெற்றது .. பக்தர்கள் அனைவரும் இறைவனுடன் அருள் பெற்று மனம் முழுவதும் இறைவனுடைய பக்தியில் கலந்து மனம் மகிழ்ச்சியாக சுவாமியின் பிரசாதத்துடன் இல்லம் திரும்பினர். அனைவருக்கும் சனாதன தர்ம பக்த சபையின் சார்பாக கோயில் நிர்வாகம் நன்றியை தெரிவித்துக் கொண்டது. - நமது செய்தியாளர் ஹரேராம் தியாகராஜன்