உள்ளூர் செய்திகள்

ஜெர்மனியில் மகரிஷி பரஞ்ஜோதியார்

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்துள்ள திருமூர்த்தி மலை தென்கயிலை உலக சமாதான அறக்கட்டளை நிறுவநர் தத்துவ தவ உயர்ஞான பீடாதிபதி – உலக அமைதித்தூதர் - ஜெகத்குரு மகா மகரிஷி பரஞ்ஜோதியார் ஆகஸ்டு ஆறாம் தேதி முதல் அக்டோபர் ஏழு வரை ஐரோப்பா – அமெரிக்க நாடுகளில் ஆன்மிக நல்லெண்ண யாத்திரை மேற்கொள்ளுகிறார். ஆகஸ்டு ஆறாம் தேதி ஜெர்மனி பிரான்க்போர்ட் விமான நிலையத்தில் ஜெர்மானியர்கள் உள்ளிட்ட ஏராளமான அவர்தம் சீடர்கள் குழுமியிருந்து வரவேற்றனர்.இந்நாட்களில் அகதவப் பயிற்சி – ஆழ்நிலை தியானம் – சர்வ சக்தி சித்தி மகா யக்ஞம் – ஜீவரக்ஷா முதலிய பயிற்சிகள் அளிக்கிறார். ஆகஸ்டு 30 ஆம் தேதி ஜெனிவா செல்லும் மகரிஷிக்கு ஐ.நா. அலுவலக நிர்வாக அதிகாரி ராஜா ஆறுமுகம் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படவிருக்கிறது. செப்டம்பர் 5 ஆம் தேதி கலிபோர்னியா புறப்படுகிறார்.- நமது செய்தியாளர் வெ.புருஷோத்தமன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்