உள்ளூர் செய்திகள்

கவிதை நூல் வெளியீடு

கவிஞர் தூயவனின் 'தேம்ஸ் நதிக்கரையில் தொலைந்து போனவர்கள் ' கவிதை நூல் வெளியீட்டு விழா இலண்டனை அடுத்துள்ள சுவிண்டன் நகரில் சுவிண்டன் தமிழச்சங்க வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது. மருத்துவர். மைக்கேல் நடராஜன் கவிதை நூலை வெளியிட, சுவிண்டன் தமிழ்ச்சங்க தலைவர் சிவசங்கரன் பெற்றுக்கொண்டார். இந்த விழாவை வல்வெட்டி. கவிஞர். தவராசா தொகுத்து வழங்கிட, அருண் மனோகரன் வரேற்புரை நிகழ்த்தி நூலை அறிமுகம் செய்தார். மருத்துவர். வாசு தந்துல்லு, மரு.சரவணப்பா நடராஜன், கவிஞர் செளரிராஜன் நாராயணன் ஆகியோர் வெகு சிறப்பாய் கலந்தாய்வு செய்தனர். நிகழ்வின் இறுதியில் நூலாசிரியர் கவிஞர். தூயவன் ஏற்புரை ஆற்றினார். - தினமலர் வாசகர் தூயவன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்