அபுதாபி இந்து கோவில் தரிசன நேரம் நீட்டிப்பு
அபுதாபி : அபுதாபியில் பாப்ஸ் இந்து கோவில் புதிதாக திறக்கப்பட்ட பின்னர் வழிபாட்டுக்காக வரும் பொதுமக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் இதனை பார்வையிட வருபவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது. அமீரகத்தில் பக்ரீத் பண்டிகை விடுமுறையின் போது இந்த கோவிலுக்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பக்ரீத் பண்டிகை விடுமுறையை முன்னிட்டு வரும் 15,16,18, மற்றும் 19 ஆகிய 4 நாட்களுக்கு தரிசன நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட நாட்களில் காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை பக்தர்கள் தரிசனம் செய்யலாம். மேலும் 17 ந் தேதி திங்கட்கிழமை அன்று கோவிலுக்கு வாரந்திர விடுமுறையாகும். அன்றைய தினம் கோவில் தரிசனத்துக்காக திறக்கப்படாது. தரிசனம் செய்ய விரும்புவோர் முன்பதிவு செய்து வர வேண்டும்.என்ற இணையத்தள முகவரியில் பக்தர்கள், முன்பதிவு செய்துகொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யப்படாத பார்வையாளர்கள், பக்தர்களுக்கு கூட்ட நெரிசல் நேரத்தில் தரிசனம் செய்ய தாமதமாகலாம் அல்லது அனுமதி மறுக்கப்படும் வாய்ப்புள்ளது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. - நமது செய்தியாளர் காஹிலா