அல்-அசா தமிழ்ச் சங்க கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டம்
சவூதி அரேபியா, அல்-அசா தமிழ்ச் சங்கம், தனது 5 ஆம் ஆண்டு கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவை உற்சாகத்துடனும், ஒற்றுமையுடனும் கொண்டாடியது. விழாவின் தொடக்கமாக சாஷ்டி பரமசிவன் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு வாழ்த்துக்கள் கூறி வரவேற்று பேசினார். அவர் மேலும் கூறுகையில் இந்த கிறிஸ்துமஸ் ஒற்றுமை, அன்பு மற்றும் அனைவருக்கும் நல்வாழ்வு அளிக்கும் நாளாக இருக்க வேண்டும் என்றார். தொடர்ந்து, சிறப்பு விருந்தினர்களாக பாலசந்தர், விஜயஸ்ரீ விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிறிஸ்துமஸ் சிறப்புரை வழங்கி வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டனர். விழாவின் மையப்பகுதியில் கிறிஸ்துமஸ் கரோல் பாடல்கள் மற்றும் குழந்தைகளின் நடனம் அனைவரின் உள்ளங்களையும் கவர்ந்தது. மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைத்து குழந்தைகளுக்கும் கிறிஸ்துமஸ் சிறப்பு பரிசுகள் வழங்கி மகிழ்விக்க பட்டது. இந்த விழாவில் அனைவரும் கிறிஸ்துமஸ் சிறப்பு உணவு மற்றும் இனிப்புகள் உண்டு தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை அல்-அசா தமிழ்ச் சங்க செயற்குழு உறுப்பினர்கள் சிறப்பாக செய்திருந்தனர். இந்த நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த உதவிய அனைத்து உறுப்பினர்களுக்கும், குடும்பங்களுக்கும் அல்-அசா தமிழ்ச் சங்கம் தனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டது. - நமது செய்தியாளர் M.Siraj