உள்ளூர் செய்திகள்

தொழிலாளர்களுக்கு பஹ்ரைன் பொது பேருந்து பயண அட்டைகள் விநியோகம்

மனாமா: லைட்ஸ் அஃப் கைண்ட்னஸ் சமூக உதவி இயக்கம் மற்றும் மனித நேய கலாச்சார பேரவை -பஹ்ரைன் மண்டலமும் இணைந்து, சல்மாபாத் மற்றும் உம் அல் ஹசம் பகுதியில் குறைந்த வருமானம் கொண்ட தொழிலாளர்களுக்கு பஹ்ரைன் பொது பேரூந்து பயண அட்டைகள், பழங்கள், ஜுஸ் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் விநியோகித்தனர். இந்த இரண்டு குழுக்களின் பிரதிநிதிகளான ஷஃபீக், சையத் ஹனீஃப், மன்னை அலி, நூர் மஸ்தான், ஹபிபுல்லா, ஜமால் பாஷா மற்றும் நவாஸ் ஆகியோர் விநியோகத்தில் பங்கேற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !