வெப்பத்தை வெல்லுங்கள் திட்டத்தின் சமூக உதவி
பஹ்ரைன்: 'லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ்' சமூக உதவி இயக்கத்தின் சார்பாக துப்லி பகுதியில் உள்ள 75 குறைந்த வருமானம் கொண்ட பெண்களுக்கு உணவுப் பொட்டலங்கள், பழச்சாறு, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் இனிப்புகள் வழங்கப்பட்டது. லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸின், வெப்பத்தை வெல்லுங்கள் திட்டத்தின் ஒரு பகுதியாக ஈத் பெருநாள் விடுமுறை நாட்கள் தொடங்கி, இதுவரை 650 உணவுப் பொட்டலங்களை பஹ்ரைனின் பல பகுதிகளிலும் விநியோகிக்கப்பட்டு வருகின்றது. இந்த முயற்சி கோடை இறுதி வரை தொடரும். 'லைட்ஸ் ஆஃப் கைண்ட்னஸ்' பிரதிநிதிகள் சையத் ஹனீஃப், ஷஃபீக் மலபுறம், ஆயிஷா நிஹாரா மற்றும் பிரியா நிஷா ஆகியோர் விநியோகத்தில் பங்கேற்றனர். - நமது செய்தியாளர் காஹிலா