உள்ளூர் செய்திகள்

அன்னை தமிழ் மன்றம் சார்பில் ரத்த தான முகாம்

பஹ்ரைனில் பல்வேறு சமூக சேவைகளைச் செய்துவரும் அன்னை தமிழ் மன்றம், ஈகைத்திருநாள் மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு 13-04-2024 சனிக்கிழமை அன்று பஹ்ரைன் சல்மானியா மருத்துவமனை வளாகத்தில் மாபெரும் ரத்த தான முகாமை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் சுமார் 150 பேர் கலந்து கொண்டு குருதிக் கொடை அளித்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த முகாமை அன்னை தமிழ் மன்றத்தின் நிர்வாகிகள் நேர்த்தியாகக் கையாண்டு, வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். குருதிக் கொடையாளர்கள் ஒவ்வொருவரும் அன்னை தமிழ் மன்றத்தின் சார்பில் மரக்கன்றுகள் மற்றும் உணவு வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இறுதியாக அன்னை தமிழ் மன்றத்தின் தலைவர் செந்தில் GK, மற்றும் பொதுச்செயலாளர் முனைவர் தாமரைக்கண்ணன் இணைந்து சல்மானியா மருத்துவமனை அதிகாரிகளுக்கு நினைவுப்பரிசு வழங்கி சிறப்பித்ததோடு, இந்நிகழ்வை சிறப்பாக ஒருங்கிணைத்து நிறைவேற்றிய சமூகநலத்துறை செயலாளர் அருண், மன்ற வளர்ச்சித்துறை செயலாளர் பாலசந்தர்க்கும் பாராட்டினை தெரிவித்தனர். இறுதியாக மன்றத்தின் பொதுச்செயலாளர் நன்றி கூறி இந்நிகழ்வை இனிதே நிறைவு செய்தார். - நமது செய்தியாளர் பெ.கார்த்திகேயன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !